Show all

பொறுப்பின்மையால் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளைக் கோட்டை விட்ட எதிர்க்கட்சிகள்! வேட்பு மனுவே பதிகை செய்யவில்லை

பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளர்கள் 2 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்கள். அவர்கள், ஆலோ கிழக்கு தொகுதியில் போட்டியிடும் சர் கெண்டோ ஜினியும், யாசூலி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் எர் தபா தெதிரும் ஆவார்கள். அவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் அவர்களுக்கு எதிராக யாரும் வேட்பு மனு பதிகை செய்யவில்லையாம்.

12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அருணாசல பிரதேச மாநிலத்தில் முதல்வர் பெமாகாண்டு தலைமையில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடக்கிறது. அந்த சட்டமன்றத்தின் ஆயுள் முடிவடைவதால், பாராளுமன்ற தேர்தலுடன் 60 இடங்களை கொண்ட அருணாசல பிரதேச சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.

60 இடங்களை கொண்ட அருணாசல பிரதேச சட்டமன்றத்  தேர்தலில், ஒரே கட்டமாக, 28,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120 வியாழனன்று (11.04.2019) வாக்குப்பதிவு நடக்கிறது.

இந்த தேர்தலுக்கான வேட்பு மனு பதிகை மற்றும் வேட்பு மனு பரிசீலனை நேற்றுடன் முடிந்தது. இந்த நிலையில், அங்கு சட்டமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளர்கள் 2 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்கள். அவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் அவர்களுக்கு எதிராக யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

வேட்பு மனு பதிகை நாள் முடிவு அடைந்து விட்டபடியால் அவர்கள் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,103.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.