முன்பு காங்கிரஸ், தற்போது பாஜக ஆளுமையில், இந்திய அரசின், ஹிந்தித் திணிப்பை தமிழகம் எதிர்த்து அதிரடி காட்டுவது வழக்கம். வாகன ஓட்;டுநர்களுக்கு இந்திய அரசின் கடுமையான பத்து மடங்கு அபராதம் என்கிற அபராதத் திணிப்புக்கு எதிராக ஒவ்வொரு மாநிலமாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்திய அரசின் அபராதத் திணிப்புக்கு மாநிலஅரசுகளின் எதிர்ப்பு இந்திய அளவில் களை கட்டி வருகிறது. 26,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: முன்பு காங்கிரஸ், தற்போது பாஜக ஆளுமையில், இந்திய அரசின், ஹிந்தித் திணிப்பை தமிழகம் எதிர்த்து அதிரடி காட்டுவது வழக்கம். வாகன ஓட்டுநர்களுக்கு இந்திய அரசின் கடுமையான பத்து மடங்கு அபராதம் என்கிற அபராதத் திணிப்புக்கு எதிராக ஒவ்வொரு மாநிலமாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்திய அரசின் அபராதத் திணிப்புக்கு மாநிலஅரசுகளின் எதிர்ப்பு இந்திய அளவில் களை கட்டி வருகிறது. மக்களோடு மக்களாக இயங்கும் மாநில அரசுகள்தான் மக்களுக்கான அரசாக அமைய முடியும். இந்திய அரசில் ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் தான்தோன்றி தனமாகச் சிந்தித்து தற்போதைய பாஜகவினர் போல தவறான முடிவு எடுத்தால், தட்டிக் கேட்பதற்காகவே கூட்டாட்சி தத்துவமாக இந்திய அரசியல் சட்டம் அம்பேத்கார் போன்றவர்களால் வடிவமைக்கப் பட்டது. அந்த அமைப்பு முறை களையப் பட்டு பாஜக விரும்பும் ஒரே நாடு ஒரே கட்சி ஆட்சி அமையுமானல் மக்கள் மாளாத துயரில் மூழ்க வேண்டியிருக்கும் என்பது இந்த அபராதச் சட்டமே நமக்கு உணர்த்தும் பாடமாகும். புதிய வாகனச் சட்டத் திருத்தம், பாஜகவிற்கு ஆளும் வாய்ப்பு கிடைத்துள்ள இந்திய அரசால் கொண்டுவரப்பட்டு, அமல்படுத்தப்பட்டு மேற்கு வங்கம் தவிர்த்து நாடு முழுவதும் அபராதங்கள் கோடி கோடியாய் அள்ளிக் குவிக்கப் பட்டு வருகின்றன. இந்நிலையில், மாற்றியமைக்கப்பட்ட இந்தப் புதிய அபராதத் தொகை மக்களுக்கு பாரமாக உள்ளதாகப் பல மாநிலங்கள் கருத்து தெரிவித்துள்ளன. குஜராத் அரசு குறிப்பிட்ட 17 சாலை விதி மீறலுக்கான அபராதத் தொகையைக் குறைத்து, சட்டம் கொண்டுவந்தது. இதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களும் தங்கள் மாநிலத்தில் அபராதத் தொகையை குறைக்கும் முடிவுக்கு வந்துள்ளன. கர்நாடகாவும், குஜராத் மாநிலத்தில் கொண்டுவரப்பட்டுள்ள அபராதக் குறைப்பு தொடர்பான உத்தரவைப் பார்த்து, பின்னர் அதுபோன்று இங்கும் கொண்டுவரப்படும் என்று தெரிவித்தது. மேலும் மகாராஷ்டிரா, ஒடிஷா, கேரளா தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள், இந்த அபராதத் தொகையைத் தங்களின் மாநிலங்களில் குறைக்கும் முடிவில் இருப்பதாகத் தெரிகிறது. அபராதத் தொகை உயர்த்தப்பட்டது தொடர்பாக இந்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி வீட்டின் முன்பு, காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அபராதத் தொகை சம்பந்தமாக எழுந்த எதிர்ப்புகள் தொடர்பாகப் பேசிய அமைச்சர் நிதின்கட்கரி: இந்தக் கட்டண உயர்வை அரசு வருமானத்துக்காகச் செய்யவில்லை. மக்கள் உயிரை காக்கவே இந்தக் கடுமையான நடவடிக்கைகளைக் கொண்டுவந்தோம். உயிரைவிட பணம் ஒன்றும் பெரிதில்லை! என்று, ஏதோ அவர்கட்சி சொல்லுகிற நியாயத்தை கிளிப்பிள்ளையாக தெரிவிக்கிறார். மக்கள் சட்டைப்பையில் இருக்கிற பணத்தை எப்படி ஐயா நீங்கள் உரிமை கொண்டாடுவீர்கள்? பணம் முதன்மையில்லை என்று நீங்கள் சொல்வது உண்மையென்றால், தலைக்கவசம் இல்லாதவர்களுக்கு தலைக்கவசமும், காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு காப்பீடும், ஓட்டுநர் உரிமம் பெறாதவர்களுக்கு அரசு செலவில் உடனே பயிற்சி கொடுத்து உரிமமும், வாகனமாசு ஏற்படுத்தும் வண்டிகளுக்கு மாற்று வண்டி கொடுப்பதும்தானே பணம் முதன்மையில்லை, பணத்தைவிட உயிர்தான் முதன்மை என்று நீங்கள் நினைப்பதாகப் பொருள். அப்படி நினைக்கின்றீர்கள் என்றால், உங்கள் செயலை யார் தடுப்பார்கள்? அப்படி தடுக்க முயலும் போதுதான் பணம் முதன்மையில்லை மக்களின் உயிர்தான் பாஜகவிற்கு முதன்மை என்று பீற்றிக் கொள்ள முடியும். எங்கள் சட்டைப் பையில் இருக்கிற பணம் முதன்மையில்லை என்று அநியாயத்திற்கு இப்படியெல்லாம் நியாயத்தீர்ப்பு வழங்கக் கூடிய அறிவாளிகள் உலகில் பாஜகவினரைத் தவிர யாரும் இருக்க முடியாது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,273.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.