‘சாலைகள் குண்டும், குழியுமாக இருந்தால் சம்பந்தப்பட்ட ஒப்பந்தாரருக்கு அதிக அபராதம் விதிப்பதற்கான ஏற்பாடுகள் புதிய சட்டத்தில் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் விதிமுறைகளை அமல்படுத்த வேண்டிய அதிகாரிகள் தவறு செய்தாலும், அவர்களுக்கும் அதிக அபராதம் விதிக்கப்படும். அதற்கான ஏற்பாடுகளும் புதிய சட்டத்தில் உள்ளன. என்கிறார் நிதின்கட்கரி 25,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அபராதங்களை மிகவும் கடுமையாக உயர்த்தியிருப்பதற்கு வாகன ஓட்டிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதற்கு மிகவும் முதன்மைக் காரணமாகச் சொல்லப் படுவது, ‘இங்கு சாலைகள் முதலில் தரமாக இல்லை. சாலைகளை தரமாக கட்டமைத்து விட்டு, அதன்பிறகு இதுபோன்று அபராதம் வசூலிக்கலாம்’ என்றே பெரும்பாலானோர் தெரிவித்து வருகின்றனர். எனவே நாட்டின் பல பகுதிகளில் சாலை வசதிகள் மிகவும் மோசமாக உள்ளதே? என அமைச்சர் நிதின்கட்கரியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த நிதின்கட்கரி, ‘சாலைகள் குண்டும், குழியுமாக இருந்தால் சம்பந்தப்பட்ட ஒப்பந்தாரருக்கு அதிக அபராதம் விதிப்பதற்கான ஏற்பாடுகள் புதிய சட்டத்தில் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் விதிமுறைகளை அமல்படுத்த வேண்டிய அதிகாரிகள் தவறு செய்தாலும், அவர்களுக்கும் அதிக அபராதம் விதிக்கப்படும். அதற்கான ஏற்பாடுகளும் புதிய சட்டத்தில் உள்ளன. என்றார். மக்களைக் குற்றப் பின்னனி உள்ளவர்களாக சித்தரித்து, அவர்களுக்குள் எப்போதும் அச்சம் படர்ந்திருக்குமாறு ஆட்சி நடத்துவததே பாஜகவின் பாணி என்கிற போது, இது எங்கே போய் முடியப் போகிறது என்று யாராலும் கணிக்க முடியமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர். சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,272.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



