32,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த காமராஜர் பிறந்த நாள் விழாவில் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது: பொதுவாழ்வில், அரசியல் வாழ்வில் எப்படி இருக்க வேண்டும் என்பதை நிரூபித்து காட்டியவர் காமராசர். 9 ஆண்டு முதல்வராக இருந்து தமிழ்நாட்டுக்கு பொற்காலத்தை உருவாக்கி கொடுத்தார். அணைகள், தொழிற்சாலைகள், நீர்ப்பாசன திட்டம், மின்உற்பத்தி நிலையங்கள், கிராமங்களில் மருத்துவமனை, குக்கிராமங்களில் பள்ளிகள், சாலைகள், பொதுத்துறை நிறுவனங்களை ஏற்படுத்தியவர். வாழ்நாளில் அவர் தவறு செய்தார் என எதையும் சொல்ல முடியாது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் முட்டையில் கூட ரூ.360 கோடி அடிக்கிறார்கள். முட்டையிலே இவ்வளவு கோடி என்றால் மற்ற எல்லாவற்றிலும் எவ்வளவு இருக்கும்? ஆசை இருக்க வேண்டியதுதான்... ஆனால் எதற்கும் ஒரு அளவு உண்டு. மக்களுக்கு சேவை செய்ய விரும்பாதவர்கள் பொதுவாழ்க்கைக்கு வரக்கூடாது. காமராசர் வழியை கொஞ்சமாவது கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,850.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



