Show all

5000000 மதிப்புள்ள வீடு பரிசாகப் பெறும் மக்கள் இசை கலைஞர் செந்தில் கணேசு! சிறந்த பாடகர் விருதை வென்று

32,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விஜய் தொலைக்காட்சி நடத்தும் சிறந்த பாடகர் நிகழ்ச்சியில் முதல் இடத்தை மக்கள் இசை கலைஞர் செந்தில் கணேஷ் வென்றுள்ளார். 

இன்று நடைபெற்ற இறுதிச் சுற்றுப் போட்டியில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

அதன் பொருட்டு ஏ.ஆர்.ரகுமான் இசையில் விரைவில் பாட வாய்ப்பும் வழங்கப் படவிருக்கிறது.

விஜய் தொலைக்காட்சி நடத்தும் சிறந்த பாடகர் ஆறாவது பருவ நிகழ்ச்சி கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. பெரும்பாலும் திரையிசை பாடல் பாடக்கூடியவர்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வந்த நிலையில் இந்தப் பருவத்தில் முதன்முறையாக நாட்டுப்புற கலைஞர்களுக்கு இடம் அளிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் கணேஷ் மற்றும் அவரது மனைவி ராஜலெட்சுமி போட்டியாளர்களாக இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர்.

இவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது முதலே பலத்த வரவேற்பு இருந்து வந்தது. குறிப்பாக இவர்கள் பாடிய பாடல்கள் மக்கள் இசையை அடுத்த தளத்துக்கு எடுத்துச் சென்றன. நெசவாளர்கள், உழவர்கள் என அனைத்து தரப்பினரின் வாழ்க்கையை பாடலாக எடுத்து பாடியது அனைவரையும் கவர்ந்தது.

இந்தப்; போட்டியில் 5000000 மதிப்புள்ள வீடு இவருக்கு பரிசாக வழங்கப் பட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,850.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.