Show all

பிசுபிசுத்துப் போன தங்கக் கனவு! உத்தரப்பிரதேசத்தில் தங்கம் கிடைப்பதற்கான வாய்ப்பெல்லாம் இல்லையாம்! புவியியல் ஆய்வு மையம் விளக்கம்

உத்தரப்பிரதேசத்தில் தங்கம் கிடைப்பதற்கான வாய்ப்பெல்லாம் இல்லையாம்! புவியியல் ஆய்வு மையம் விளக்கம். இந்த அருமையான பொருளாதார வாய்ப்பும் போச்சா? இனி பொருளாதாரச் சிக்கலை மறைக்க, நடுவண் பாஜக அரசு தங்கள் கருத்துப்பரப்புதல் யுக்தியான தேசபக்தி- தேசத்துரோகி கதையைத் தொடங்கிவிடுமே. 

11,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உத்தரப்பிரதேச மாநிலத்தில் 3350 டன் அளவிலான தங்கம் கிடைப்பதாற்கான தாதுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலால் ஒட்டு மொத்த இந்தியாவும் கனவில் மிதந்த நிலையில்- உண்மையில்லை என்று இந்திய புவியியல் ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது

இது தொடர்பாக அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பந்தரா மாவட்டத்தில் 3 ஆயிரத்து 350 டன் அளவில் தங்கத்திற்காக வாய்ப்பு ஏதும் கண்டுபிடிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேறு தாதுக்கள் தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அதிலிருந்து தங்கத்தை பிரித்து எடுத்தால் வெறும் 160 கிலோ தங்கம் தான் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் அந்த மையம் கூறியுள்ளது.

இந்த அருமையான பொருளாதார வாய்ப்பும் போச்சா? இனி பொருளாதாரச் சிக்கலை மறைக்க, நடுவண் பாஜக அரசு தங்கள் கருத்துப்பரப்புதல் யுக்தியான தேசபக்தி- தேசத்துரோகி கதையைத் தொடங்கிவிடுமே. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.