Show all

அருண் மிஷ்ராவின் கருத்து இந்த ஆண்டின் மிக சிறந்த நகைச்சுவை: சாவந்த்! அந்த நகைச்சுவை: மோடி தொலைநோக்கு பார்வை கொண்டவர்

உச்சஅறங்கூற்றுமன்ற மூத்த அறங்கூற்றுவர் அருண் மிஷ்ராவின் கருத்தை இந்த ஆண்டின் மிக சிறந்த நகைச்சுவை என உச்சஅறங்கூற்றுமன்ற முன்னாள் அறங்கூற்றுவர் சாவந்த் தெரிவித்துள்ளார். அந்த நகைச்சுவை: மோடி தொலைநோக்கு பார்வை கொண்டவர் என்பது.

11,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியத் தலைமைஅமைச்சர் மோடி தொலைநோக்கு பார்வை கொண்டவர் என்று கூறி புகழ்ந்து பேசிய உச்சஅறங்கூற்றுமன்ற மூத்த அறங்கூற்றுவர் அருண் மிஷ்ராவுக்கு ஓய்வு பெற்ற அறங்கூற்றுவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சர்வதேச அளவில் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமைஅமைச்சர் மோடியின் ஆட்சியில் இந்தியா பொறுப்புணர்வு மற்றும் நட்புமிக்க நாடாக விளங்குகிறது என உச்சஅறங்கூற்றுமன்ற மூத்த அறங்கூற்றுவர் அருண் மிஸ்ரா புகழ்ந்து பேசினார்.

அவரது இந்தப் பேச்சுக்கு ஓய்வு பெற்ற அறங்கூற்றுவர்கள் பலர் கண்டம் தெரிவித்து கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர். நாட்டின் உச்சஅறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர் ஒருவர், தலைமைஅமைச்சர் மோடியை இவ்வாறு புகழ்ந்து பேசுவது தேவையற்றது எனவும், இதுபோன்ற கருத்துகள் அறங்கூற்றுத்துறையின் சுதந்திரத்தை பாதிக்கும் என அவர்கள் குறிப்பிட்டனர். 

அறங்கூற்றுவர் அருண் மிஷ்ராவின் கருத்து இந்த ஆண்டின் மிக சிறந்த நகைச்சுவை என உச்சஅறங்கூற்றுமன்ற முன்னாள் அறங்கூற்றுவர் சாவந்த் தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.