கொரோனாவைவிட நிவாரணம் துளியும் இல்லாத அதிகாரப்பாட்டு ஊரடங்கால் மக்கள் தொழில், வருமானம் இல்லாமல் கடுமையாக பாதித்து வரும் நிலையில் ஊரடங்கில் கொஞ்சம் தளர்வு முன்னெடுக்கப்படுகிறது. அந்த வகையில், இந்தியாவில் பச்சை மற்றும் ஆரஞ்ச் மண்டலங்களில் இயங்கலை மூலம் அனைத்து பொருட்களையும் விற்பனை செய்யலாம் என்று நடுவண் அரசு சார்பாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 19,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: இந்தியாவில் பச்சை மற்றும் ஆரஞ்ச் மண்டலங்களில் இயங்கலை மூலம் அனைத்து பொருட்களையும் விற்பனை செய்யலாம் என்று நடுவண் அரசு சார்பாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு மேலும் 2கிழமைகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் நடுவண் உள்துறை அமைச்சகம் இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 4,வைகாசி வரை (மே17) ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனாவைவிட நிவாரணம் துளியும் இல்லாத அதிகாரப்பாட்டு ஊரடங்கால் மக்கள் தொழில், வருமானம் இல்லாமல் கடுமையாக பாதித்து வரும் நிலையில் ஊரடங்கில் கொஞ்சம் தளர்வு முன்னெடுக்கப்படுகிறது. அந்த வகையில், இந்தியாவில் பச்சை மற்றும் ஆரஞ்ச் மண்டலங்களில் இயங்கலை மூலம் அனைத்து பொருட்களையும் விற்பனை செய்யலாம் என்று நடுவண் அரசு சார்பாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அமேசான், பிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள் இயங்கலை மூலம் அனைத்து பொருட்களையும் விற்பனை செய்யலாம். இதனால் பச்சை மற்றும் ஆரஞ்ச் மண்டலங்களில் கட்டாயத்தேவைப் பொருட்கள் அல்லாத மற்ற பொருட்களையும் கேட்பு செய்ய முடியும். அதாவது புத்தகங்கள், உடைகள், பேசிகள் போன்ற பொருட்களையும் கேட்பு செய்ய முடியும். ஆனால் சிவப்பு மண்டலங்களில் கட்டாயத்தேவைப் பொருட்களை மட்டுமே கேட்பு செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுக்க இயங்கலை வணிகத்தில் வீடுகளுக்கே சென்று பொருள் வழங்கிவரும் ஏராளமான இளைஞர்கள் வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நடுவண் பாஜகவின் கார்ப்ரேட் ஆதரவு கோட்பாட்டிற்கு வாய்ப்பாகவும், கார்ப்பரேட் நிறுவனங்களின் வணகத்தை மீட்டு எடுக்கும் வகையிலும் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தியாவில் முதல் முறையாக கடந்த நாற்பது நாட்களில் இயங்கலை மூலம் ஒரு பேசி கூட விற்பனை செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



