தற்போது வாணி போஜன் கைவசம் 5 படங்கள் உள்ளன. அதுமட்டுமின்றி, அவர் இணையத் தொடர் ஒன்றிலும் நடித்து வருகிறார். இந்த இணையத் தொடரை ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கிறார். 19,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: ஓ மைகடவுளே, படம் மூலமாக திரையுலகில் அறிமுகமாகி பேரறிமுகமான வாணி போஜன் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸின் இணையத் தொடரில் நடிக்கிறார். அதுமட்டுமின்றி, அவர் இணையத் தொடர் ஒன்றிலும் நடித்து வருகிறார். இந்த இணையத் தொடரை ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கிறார். இந்த இணையத் தொடரை ஏ.ஆர்.முருகதாஸின் துணை இயக்குனர் இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது. தற்போது கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு முடிந்தபின் இந்த இணையத் தொடர் குறித்த அதிகாரப்பாட்டுத் தகவலை வெளியிட உள்ளனர்.
தொலைக்காட்சி மூலம் வரவேற்பு பெற்ற வாணி போஜன் ஓ மைகடவுளே படம் மூலமாக திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். நடிப்புக்காக விமானப் பணிப்பெண் வேலையை உதறிவிட்டு வந்தவர். ஓ மைகடவுளே படத்தில் அவருடைய வேடத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தவண்ணம் உள்ளன. தற்போது அவர் கைவசம் 5 படங்கள் உள்ளன.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



