Show all

இப்போதைக்கு பாரத்பெட்ரோலியம்! எதையாவது வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தால் குறித்து வையுங்கள். ஒவ்வொன்றாக விற்பனைக்கு வரும்போல

நாம் வாங்க வேண்டுமே என்று நினைத்தது, நினைக்காதது எல்லாம், இந்தியாவில் விற்பனைக்கு வந்து கொண்டிருக்கிறது. யாராவது பாரத்பெட்ரோலித்தை வாங்க நினைத்திருந்தால் அவர்களுக்கு ஓர் இனிய செய்தி பாரத் பெட்ரோலிய நிறுவன பங்குகள் விற்பனைக்கு வருகிறது. ரூ.73 ஆயிரம் கோடி சொத்து உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

25,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நடுவண் அரசு நிறுவனங்களில் ஒன்று, பாரத் பெட்ரோலிய நிறுவனம். இந்த நிறுவனம் லாபத்தில் இயங்கி வருகிற நிறுவனம் ஆகும். கடந்த காலாண்டில் இந்த நிறுவனம், நிகர லாபமாக ரூ.2,051.43 கோடி ஈட்டியது. முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இந்த லாபம் 3 மடங்கு ஆகும். ஆனால் இந்த நிறுவனத்தில் தனக்கு உரிய 52.98 விழுக்காடு பங்குகளையும் விற்பனை செய்ய நடுவண் பாஜக அரசு முடிவு எடுத்துள்ளது.

இதற்கான ஒப்புதலை அமைச்சரவை கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பே அளித்துவிட்டது. அதே நேரத்தில் இந்த நிறுவனத்தின் கீழான நுமலிகார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் (அசாம்) மட்டும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். இப்போது பாரத் பெட்ரோலிய கழகத்தின் 52.98 விழுக்காட்டுப் பங்குகளை வாங்குவதற்கு விருப்பத்தை வெளிப்படுத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த பங்குகளை வாங்க விரும்புவோருக்கு சுமார் ரூ.73 ஆயிரம் கோடி சொத்துகள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசுகள் தவறு செய்தால் தட்டிக் கேட்பதற்கும், பதவி பறிப்பதற்கும், சிறையில் தள்ளுவதற்கும் வாய்ப்பு இருக்கிற நிலையில், நடுவண் பாஜக அரசு செய்து வரும்  தொடர்தவறுகளை தட்டிக் கேட்பதற்கு என்னதான் வழி என்று சமூக ஆர்வலர்கள் புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.