Show all

தமிழகத்துக்கு கொரோனாவின் ஒற்றை அறைகூவல்! வீழ்த்தி வாகை சூடவேண்டும் தமிழக நலங்குத்துறை.

ஓமன் நாட்டில் இருந்து சென்னைக்கு வந்த 45 அகவையுள்ள நபருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. கொரோனாவை வீழ்த்தி வாகை சூடவேண்டும் தமிழக நலங்குத்துறை.

24,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஓமன் நாட்டில் இருந்து சென்னைக்கு வந்த 45 அகவையுள்ள நபருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக அவர் இராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். அந்த நபர் உடல் நிலை சீராக இருந்து வருகிறது. தொடர்ச்சியாக மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார். தமிழக நலங்குத்துறை கொரோனா நுண்ணுயிரியைக் கட்டுப்படுத்துவதில் முழுவீச்சில் களம் இறங்கியுள்ளது. எனவே மக்கள் பீதி அடையத் தேவையில்லை. இவ்வாறு அவர் தனது கீச்சுப் பதிவில் நலங்குத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

முதன்முதலாக தமிழகத்திலும் கொரோனா கால் வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே லடாக் ஒன்றியப் பகுதியில் இருவர், தமிழகத்தில் ஒருவர் என, இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்று 34 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தைப் பொருத்த அளவில் இதுவரை யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில்தான் நலங்குத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது கீச்;சுவில் இந்தப்பதிவை வெளியிட்டிருந்தார். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.