கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மது அருந்துவதாலோ, மதுவை தெளித்துக் கொள்வதாலோ குணப்படுத்த முடியாது. ஒட்டு மொத்த உலகமே கொரோனா தொற்று அச்சத்திலும், பீதியிலும் இருக்கும் நேரத்தில் இது போன்ற மலிவான வக்கிரமான பதிவுகள் வேண்டாமே என்று கடுமையாக எச்சரித்துள்ளது உலக நலங்குத்துறை. 25,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றால் இது வரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸால் 34 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்க, கொரோனா நுண்ணுயிரியை அழிக்க, மது அருந்துவது உதவும் என சமூக வலைதளங்களில் சில வக்கிரங்களால் தகவல்கள் பரப்பப்பட்டன. இதுகுறித்து, விளக்கமளித்துள்ள உலக நலங்குத்துறை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மது அருந்துவதாலோ, மதுவை தெளித்துக் கொள்வதாலோ குணப்படுத்த முடியாது. ஒட்டு மொத்த உலகமே கொரோனா தொற்று அச்சத்திலும், பீதியிலும் இருக்கும் நேரத்தில் இது போன்ற மலிவான வக்கிரமான பதிவுகள் வேண்டாமே என்று கடுமையாக எச்சரித்துள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.