பல்பொருள் சிறப்பு அங்காடியில் மன்னிப்பு மடல்; ஒன்றை எழுதி வைத்துவிட்டு திரைப்பட நகைச்சுவை போல பொருட்களை களவாடிச் சென்றுள்ளார் ஒருவர். 24,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: உசிலம்பட்டி அருகே, பல்பொருள் சிறப்பு அங்காடியில் மன்னிப்பு மடல்; ஒன்றை எழுதி வைத்துவிட்டு திரைப்பட நகைச்சுவை போல பொருட்களை களவாடிச் சென்றுள்ளார் ஒருவர். 65,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் 5,000 ரூபாய் பணத்தை திருடிச் சென்றவர், தான் திருடியதற்காக மன்னிப்பு மடல் ஒன்றை அந்த கடையில் விட்டுச் சென்றுள்ளார். ‘என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு பசிக்கிறது. உங்களுக்கு இது ஒருநாள் வருவாய்தான். ஆனால் என் குடும்பத்தின் மூன்று மாத வருவாய்க்கு இது சமம். மீண்டும் ஒரு முறை என்னை மன்னித்துவிடுங்கள்’ என்று அந்த மடலில் எழுதப்பட்டிருந்தது. கடையின் உரிமையாளர் இராம்பிரகாஷ் கடையைத் திறக்க வந்தபோது கடைக்குள் இருந்த இரண்டு கணிப்பொறிகள், ஒரு தொலைகாட்சி மற்றும் 5 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை களவு போயிருந்தது தெரியவந்ததுள்ளது கண்காணிப்பு படக்கருவி காட்சிகள் மற்றும் கடையில் பதிவாகியுள்ள கைஅச்சுக்கள் ஆகியவற்றை வைத்து காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



