Show all

தற்போது இந்தியா நாடளுமன்றத்தின் முப்பெரும் கட்சிகள் திமுக, காங்கிரஸ், பாஜக! தமிழகத்தின் சேர, சோழ, பாண்டியர் போல

கடந்த முறை 37 தொகுதிகளைப் பெற்று அதிமுகவே நாடளுமன்றத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்தது. இம்முறை 23 தொகுதிகளைப் பெற்றே நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக அமையப் போகிறது திமுக. பழந்தமிழகத்தில் சேர, சோழ, பாண்டியர் போல- இற்றை நாடாளுமன்றத்தில் திமுக, காங்கிரஸ், பாஜக! நின்று, நன்று இந்தியாவை ஆளப்போகிறது. சூடு பரவட்டும்; அனல் தெறிக்கட்டும்! நீட், பிரித்தாளும் ஆதிக்கம், கார்ப்பரேட்டுகள் அதிகாரம் அனைத்தும் பொசுங்கட்டும்.

10,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நாடாளுமன்ற தேர்தலில் வடமாநிலத்தவர்களின் விருப்பப் படி 303 இடங்களுடன் அசுர பலத்துடன் பாஜக இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக, மதச்சார்பின்பையை அங்கீகரிப்போரின் ஆதரவு நிலையில் 52 இடங்களுடன் இரண்டாவது பெரிய கட்சியாக காங்கிரஸ் உள்ளது. இவ்வாறன நிலையில், 'தமிழே அடையாளம், யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற கோட்பாட்டிற்கு சொந்தக்காரர்களைத் (தமிழர்களை) தாங்கும் கட்சியாக 3வது பெரிய கட்சி என்ற தகுதியை திமுக பெறுகிறது. உதய சூரியன் சின்னத்தில் வெற்றி பெற்ற மதிமுக, விசிக வேட்பாளர்களையும் சேர்த்தால் திமுகவின் பலம் 23ஆகும். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,162.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.