Show all

மம்தாவின் தோல்விக்கு காரணம் அவரேதான்! இடதுசாரிகளிடம் இருந்து வங்காளத்தை முழுமையாக மீட்கவில்லை; வங்காள தனித்துவங்களால்.

தமிழகம் போன்று இந்தியாவில் தனித்துவமுள்ள மாநிலம் மேற்கு வங்கம். அதனாலேயே பாஜகவிற்கு, மேற்கு வங்கத்தின் மீது தனியாத தனி ஆர்வம் உண்டு. வங்காள தனித்துவத்தில் கொஞ்சமாக நடவடிக்கையுள்ள மம்தாவை, இடதுசாரிகளின் ஒத்துழைப்போடு, எளிதாக வெற்றி கொண்டு வருகிறது பாஜக! முழுமையாக வங்காள தனித்துவத்தை மீட்பதற்காக தனது கொள்கையை வடிவமைத்தால் மட்டுமே மம்தா நிற்க முடியும்

13,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மக்களவைத் தேர்தலில், மேற்கு வங்கத்தில் 18 இடங்களைக் கைப்பற்றி  மம்தாவிற்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது பாஜக.

கடந்த முறை நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், தனித்துப் போட்டியிட்டு 2 தொகுதிகளில் வெற்றி பெற்று மேற்கு வங்கத்தில் காலடி வைத்தது பாஜக. தமிழகம் போன்று இந்தியாவில் தனித்துவமுள்ள மாநிலம் மேற்கு வங்கம். என்பதால், அந்த தனித்துவங்களைத் தகர்க்க வேண்டியது பாஜகவிற்கு கட்டாயம். ஆதனால் தங்களின் தற்காலிக எதிரியான இடதுசாரிகளின் ஒத்துழைப்போடு நிரந்தர எதிர்மைக் கோட்பாடான தனித்துவங்களை இந்திய மண்ணில் இருந்து தகர்க்க பாஜக கடுமையாக முயன்று வருகிறது. அதன் பொருட்டு, மேற்கு வங்கத்தில் அசைக்க முடியாத வெற்றியைப் பெற வேண்டும் என்பது பாஜக தலைவர்களின் லட்சியமாக இருந்து வருகிறது. அதன் பலனாக, நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் 18 தொகுதிகளைக் கைப்பற்றி இருக்கிறது அக்கட்சி. 

இதை இப்படியெல்லாம் கணக்கிட்டு கொண்டாடி வருகிறது பாஜக: தற்போது வெற்றி பெற்றுள்ள 18 மக்களவைத் தொகுதிகளில், 129 சட்டப் பேரவைத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. ஆதாவது, இந்த வெற்றி, 129 பேரவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றதற்குச் சமமாகும். மொத்தம் 294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டப் பேரவையில் ஆட்சியமைப்பதற்கு 148 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். தற்போது 129 தொகுதிகளில் வெற்றியை உறுதிசெய்துள்ள பாஜக, அந்த மாநிலத்தில் ஆட்சியமைப்பதற்கு இன்னும் 19 இடங்கள்தான் தேவை.

திரிணமூல் காங்கிரஸ் விரைவில் காணாமல் போகும் என்று கருத்து கூறியிருக்கிறார் அந்த மாநிலத்தைச் சேர்ந்த பாஜகவில் இணைந்து விட்ட முகுல் ராய். இவர், வேறு யாருமல்ல, திரிணமூல் காங்கிரஸின் நிறுவன உறுப்பினர்; ஒரு காலத்தில் மம்தாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்தவர். 'இன்னும் சிறிது காலம் பொறுத்திருந்து பாருங்கள், இன்னும் சில மாதங்களில் திரிணமூல் காங்கிரஸ் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகும். இதற்காகவே நான் பாஜகவில் இணைந்தேன்' என்றும் அறைகூவல் விடுத்துள்ளார்.

அதுமட்டுமன்றி, மம்தாவுக்கு மேலும் பீதியை ஏற்படுத்தும் விதமாக, திரிணமூல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் தங்களுடன் தொடர்பில் இருப்பதாக பாஜக மூத்த தலைவர்கள் கூறியுள்ளனர். இதற்கு முன்பு, மேற்கு வங்கத்தில் கருத்து பரப்புதல் மேற்கொண்டபோது 40 சட்டமன்ற உறுப்பினர்கள், பாஜக தலைவர்களுடன் தொடர்பில் இருப்பதாக மோடி கூறினார்.

இந்நிலையில், கட்சி விரோதச் செயல்களில் ஈடுபட்டதாக, முகுல் ராயின் மகன் சுப்ரங்சு, திரிணமூல் காங்கிரஸில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். கட்சிக்காக கடினமாக உழைத்தாலும், அதற்கான நற்பெயர் இதுவரை கிடைக்கவில்லை என்று கூறியுள்ள அவர், தற்போது தனது தந்தையை நினைத்து பெருமைப்படுவதாகக் கூறியுள்ளார்.

பாஜக இரண்டு ஆண்டுகளில் நடைபெறப்போகும் சட்டப் பேரவைத் தேர்தலில், திரிணமூல் காங்கிரசுக்கு வலுவான போட்டியை கொடுக்க பாஜக திட்டமிட்டுள்ளது.

மேற்கு வங்காளம் என்பது இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலமாகும். உலக அளவில், ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் அதிகமா? வங்காள மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் அதிகமா? ஏன்கிற போட்டிப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் 4வது பெரிய மாநிலமாகும்.

முகமதிய மதத்தை ஏற்றுக்கொண்ட போதும், தங்கள் தாய்மொழியை (வங்காள) விட்டுக் கொடுக்காத மக்கள் உலகில் வங்காளிகள் மட்டுமே. அதன் பொருட்டே பாகிஸ்தானிலிருந்து பிரிந்து வங்காள தேசம் உருவானது. 

ஹிந்து மதத்தை சேர்ந்த வங்காளிகளின் மேற்கு வங்க மாநிலம் விடுதலையின் போது இந்தியாவுடன் இணைந்தது. தமிழகத்தில் காங்கிரசை வெளியேற்றய போது, தங்கள் தனித்துவத்தை தூக்கிப் பிடித்த திமுக அங்கீகரிக்கப் பட்டது. வுங்காளத்தில் காங்கிரசை வெளியேற்றியபோது, பிழையாக இடதுசாரிகள் அங்கீகரிக்கப் பட்டதால், வங்காளத்தின் தனித்துவம் கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்தது.  இந்தநிலையில்தான் மேற்கு வங்கத்தைக்  கைப்பற்றினார் சாதனை படைத்தார் மம்தா பானர்ஜி. ஆனால் வங்காளத்திற்கான தனித்துங்களை கொண்டாடுவதில் கோட்டை விட்டார். ஆதற்காகவே காத்திருந்த பாஜக இந்தத் தேர்தலில் மேற்குவங்காளத்தில் வலிமை பெற்றிருக்கிறது. 

மம்தாவின் தோல்விக்கு காரணம் அவரேதான்! இடதுசாரிகளிடம் இருந்து வங்காளத்தை முழுமையாக மீட்கவில்லை; வங்காள தனித்துவங்களால். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,165.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.