Show all

தேவையா பாரதப்போர் எடுத்துக்காட்டு! கொரோனவால் உலகமே அலைகழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில்

மகாபாரத போரில் வெற்றி பெற 18 நாட்கள் தேவைப்பட்டன, கரோனாவுக்கு எதிரான போரில் வெல்ல 21 நாட்கள் நாம் காத்திருக்க வேண்டும் என தலைமைஅமைச்சர் மோடி கூறியிருப்பது, வேறு எடுத்துக்காட்டே இவர்களுக்கு கிடைக்காதா என்று பொதுவானவர்கள் பகடியாடுகின்றனர்.

13,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மகாபாரத போரில் வெற்றி பெற 18 நாட்கள் தேவைப்பட்டது, கரோனாவுக்கு எதிரான போரில் வெல்ல 21 நாட்கள் நாம் காத்திருக்க வேண்டும் என தலைமைஅமைச்சர் மோடி கூறியிருப்பது பகடியாடப்பட்டு வருகிறது.

கரோனா தொற்று பரவுவதைத் தடுக்க வேண்டும் என்ற முனைப்பில் தமிழகம் இந்தியாவில் முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது. இந்தியாவில் பல மாநில அரசுகளும் தீவிரமான நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இருப்பினும் இந்தியாவில் கரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 

இதற்காக நடுவண் அரசோ, கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடித்தல் மற்றும் மாலையில் கைத்தட்டல் ஆலோசனையை வழங்கி பகடியாடலுக்கு உள்ளானது. தொடர்ந்து தலைமைஅமைச்சர் மோடியின் அறிவிப்பு படி, எந்த விதமான வரிச்சலுகை, மற்றும் நிவாரணத் தொகை முன்னெடுப்பு எதுவும் இல்லாமல் நாடுமுழுவதும் 21நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தலைமை அமைச்சர் மோடி தனது சொந்தத் தொகுதியான வாரணாசி மக்களுடன் காணொளியில் இன்று உரையாடினார். அந்த தொகுதியைச் சேர்ந்த சிலர் காணொளி மூலம் மோடியுடன் இன்று உரையாடினர். அவர்கள் கேட்ட கேள்விக்கு மோடி பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கரோனாவை விரட்டுவதற்காக நாம் நடத்திய அரைநாள் மக்கள் ஊரடங்கிற்கு நாடுமுழுவதும் ஆதரவு கிடைத்தது. அன்றைய நாளில் மாலை 5 மணிக்கு மக்கள் கரவொலி எழுப்பி தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். இதே ஆதரவை நாம் தொடர்ந்து வெளிப்படுத்த வேண்டும். ஊரடங்கை கடுமையாக கடை பிடிக்க வேண்டும்.

ஒத்துழைக்காதவர்கள், விதியை மீறி நடப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளேன். மகாபாரத போரில் வெற்றி பெற 18 நாட்கள் தேவைப்பட்டன, கரோனாவுக்கு எதிரான போரில் வெல்ல 21 நாட்கள் நாம் காத்திருக்க வேண்டும். இவ்வாறு மோடி கூறினார். இந்தப் பாரதப்போர் 18நாட்கள் என்கிற மதவாத திணிப்பு கருத்துதான் பொதுவானவர்களால் பகடியாடப்பட்டு வருகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.