கரோனா பாதிப்புக்கு எதிரான களமாடலில் இந்தியாவில் முதன்மை மாநிலமாக உலாவருகிறது தமிழக அரசு. ஆனால் 12ம் வகுப்புத் தேர்வுகளைத் தள்ளி வைக்க, தயங்கியது ஏன் ஏன்ற குழப்பம் எதிர்க்கட்சிகளால் முன்னெடுக்கப் படுகிறது. தள்ளாடலுக்கு பொருள் இல்லாமல் இல்லை. 13,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பத்தாம் வகுப்பு வரையிலான படிப்புகளுக்கு தேர்வை தள்ளிவைப்பதில் தமிழக அரசுக்கு எந்தத் தயக்கமும் இல்லை. இந்த 12ம் வகுப்புத் தேர்வையும் தள்ளித்தாம் வைத்திருக்க வேண்டும். தள்ளி வைக்காத நிலையில்; சுய ஊரடங்கு பெற்றோர் நடுவே செயலாக்கம்பெற, கொரோனா அச்சம் காரணமாக 34 ஆயிரம் மாணவ மாணவியர் 12ம் வகுப்பு தேர்வை எழுதவில்லை. 12வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெற்று மற்ற கல்வித்திட்ட (நடுவண் இடைநிலைகல்வி வாரியப் பாடத்திட்டம்) மாணவர்களோடு மேல்படிப்புகளுக்குப் போட்டியை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் அவர்களை தேர்வே எழுத வேண்டாம் என்று தமிழக அரசு முடிவெடுக்க அதிகாரமில்லாத நிலையே தமிழக அரசின் தள்ளாடலுக்கான காரணமாக இருந்தது. தற்போது சுயஊராடங்கை 34 ஆயிரம் மாணவ மாணவியர் முன்னெடுத்த நிலையில், அவர்களின் அந்த முயற்சியையும் கொண்டாடும் வகையாக அவர்களுக்கு மீண்டும் ஒருநாளில் தேர்வு என்று எளிதாக அறிவித்து விட்டது தமிழக அரசு. இந்தப் பேச்சை இத்தோடு விட்டு கொரோனா களத்தில் ஒருங்கிணைவோம் தமிழக மக்களே. இந்தியாவில் கொரோனா தொற்றை எதிர்கொள்வதற்காக நடுவண் அரசு 21 நாட்கள் வரை ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. தமிழகஅரசு அதற்கு முன்பிருந்தே கொரோனா பரவலுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்த அறநெருக்கடி நிலையில் தமிழகத்தில் 12ம் வகுப்பு பொது தேர்வு வழக்கம்போல் நடைபெறும் என தமிழகஅரசு அறிவித்து இருந்தது. எனினும், கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட கூடும் என்ற அச்சம் மற்றும் சரிவர இயங்காத பேருந்துகள் ஆகியவற்றால் நேற்று நடந்த 12ம் வகுப்பு பொது தேர்வை 34 ஆயிரம் மாணவ மாணவியர் எழுதவில்லை என மாணவர்கள் பெற்றோர்கள் முன்னெடுத்த சுயஊரடங்குத் தகவல் வெளியாகிய நிலையில் அதை அங்கீகரிக்கும் முகமாக தமிழக அரசு மாற்று வழியாக இன்னொரு நாள் தேர்வு வைக்கப்படும் என்றும் அறிவித்து விட்டது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



