செம்பா-சின்னையா, நயன்- விக்னேஷ் காதல் பறவைகளாக சின்ன பெரிய திரையில் மட்டுமல்லாமல் நேரலையாகவும் ஆங்காங்கே வெளிப்பட்டு வருவதால், இவர்களின் திருமணம் எப்போது என்ற கேள்வி பார்வையாளர்களை துளைத்தெடுத்து வருகிறது. 21,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இன்றைக்கு தமிழ்ச் சின்னத் திரையில் செம்பருத்தி- சின்னைய்யாவும், தமிழ்த் திரையுலகில் நயன்தாரா- விக்னேஷ் சிவனும் கலைத்துறையில் மட்டுமல்லாமல், நேரலையாகயாகவும் காதல் பறவைகளாக சிறகடித்து தமிழ் கலைத்துறை பார்வையாளர்களை மகிழ்வித்து வருபவர்கள். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,142.
இந்த இணைகள் நேரலையாக சேர்ந்து செய்யும் குறும்புகள் அவ்வப்போது சின்னத் திரையில், சமூக வலைதளங்களில் நல்ல பொழுது போக்காக அமைந்து விடுகின்றன.
அண்மையில் விக்னேஷ் சிவனின் குடும்பத்தினருடன் நயன்தாரா தமிழ் புத்தாண்டை கொண்டாடிய புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து 'காதல், குடும்பம், அன்பு என வாழ்க்கை நல்ல விசயங்களால் நிறைந்துள்ளது' என்று குறிப்பிட்டிருந்தார்.
நயன்தாரா 100 படங்களில் நடித்து முடித்த பின்னர் திருமணம் பற்றி முடிவெடுக்கலாம் என்றிருந்த நிலையில், விக்னேஷ் சிவன் தாயார் திருமணம் செய்துக்கொள்ள சொல்லி அழுத்தம் கொடுப்பதாலும், நயனுக்கும் அகவையாகிக் கொண்டே போகிறது என்பதாலும் இவர்கள் திருமணம் விரைவில் நடக்கவிருக்கிறதாம்.
அந்த விரைவு என்பது: இந்த ஆண்டு இறுதியில் திருமண உறுதி செய்து கொண்டு, அடுத்த ஆண்டில் திருமணம் செய்துகொள்ளலாம் என்கிற முடிவாம். இதனால் விக்னேஷ் சிவன் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறாராம். இந்த தகவல் தற்போது கோடம்பாக்கத்திலும், இணையத்திலும் தீயாகி வருகிறது.
செம்பாவும் சின்னையாவும் எப்போது திருமணம் செய்துகொள்ள போகிறார்கள் என்கிற சேதி: ராஜா ராணி தொடர் பார்வையாளர்களின் ஆர்வமாக மட்டுமே தொடர்ந்து கொண்டிருக்கிறது. இணையத்தில் தீயாகும் விதமாக இன்னும் உறுதியான தகவல் ஏதும் வெளியாக வில்லை.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.