ஊரடங்கில், கடுமையாக பாதிக்கும் புலம்பெயர்ந்தோர். டெல்லியைத் தொடர்ந்து நொய்டாவிலும். 16,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியத் தலைமைஅமைச்சர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. சாப்பாட்டிற்கு வழியும் இல்லாமல், போக்குவரத்து சேவை துண்டிக்கப்பட்டுள்ளதால், சொந்த ஊர்களுக்கு திரும்பவும் முடியாமல் தவித்து வருகின்றனர். இந்தநிலையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்தே தங்கள் சொந்த ஊருக்கு செல்லும் முயற்சியைத் தடுக்கும் வகையாக, அவர்களின் வீட்டு வாடகையை ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என, வீட்டு உரிமையாளர்களுக்கு நொய்டா மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மீறுவோருக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
டெல்லிக்கு அடுத்தபடியாக, உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதிக அளிவில் பணியாற்றி வருகின்றனர். ஊரடங்கு உத்தரவை முன்னிட்டு, இதில் பெரும்பாலானோர் வேலைகளை இழந்துள்ளனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



