டிசம்பர்15 முதல் 19 வரை ஐதராபாத்தில் 5 நாட்கள் உலக தெலுங்கு மாநாடு நடைபெற உள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பேசிய தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனப் பலகைகளும் தெலுங்கிலேயே வைக்கப்பட வேண்டும். ஒருவேளை அவர்கள் விரும்பினால், தெலுங்குடன் பிற மொழிகளிலும் பலகைகளை வைத்துக் கொள்ளலாம். தெலுங்கானாவில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை கட்டாயம் தெலுங்கு கற்பிக்க வேண்டும். அடுத்த கல்வியாண்டு முதல் இது அமலுக்கு வர உள்ளது. தொடக்கக் கல்வி முதல் மேல்நிலை கல்வி வரை அனைத்து பாடங்களையும் தெலுங்கில் உருவாக்க சாகித்ய அகாடமிக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாட புத்தகங்களையும் தெலுங்கில் அச்சிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தெலுங்கு கற்பிக்காமல் எந்த ஒரு கல்வி நிறுவனமும் தெலுங்கானாவில் இயங்க முடியாது என கடுமையாக எச்சரித்துள்ளார். தெலுங்கானாவில் சில பள்ளிகளில் தெலுங்கிற்கு பதிலாக சிறப்பு ஆங்கிலம் கற்பிக்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து சந்திரசேகர ராவ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என கூறப்படுகிறது. நம்மிடம் இருந்து கற்றுக் கொண்டவர்கள் எல்லாம் எவ்வளவு உறுதியாக இருக்கின்றார்கள் பாரும் எடப்பாடியாரே! தாய் மண்ணில் இருந்து தாய் மொழியை நிர்பந்திப்பது சமுதாயக் கடமை. தெலுங்கானா முதல்வரின் முயற்சியைத் தமிழர்கள் வாழ்த்துவோம். நடுவண் அரசு என்ற பொது தளத்தில் இருப்போர்-அலுவல் மொழிகளாக அங்கிகரிக்கப் பட்ட தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட 22 மொழிகளுக்கும் சம அதிகாரம் உண்டு என்கிற அரசியல் சட்டத்தை மதிக்காமல் தன் தாய்மொழி ஹிந்தியைத் 1947லில் இருந்து திணித்துக கொண்டிருக்கிற மோடி வரை அனைவரும் அயோக்கியர்களே.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.