கர்நாடக உள்துறை அமைச்சராக இருந்த பரமேஸ்வரா காங்கிரஸ் தலைவராகவும் பதவி வகிப்பதால் அமைச்சர் பதவியிலிருந்து விலகினார். இதையடுத்து போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராமலிங்க ரெட்டி உள்துறை அமைச்சராக பதவி வகிக்கிறார். உள்துறை அமைச்சரான பிறகு முதல் முறையாக நேற்று அவர் பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் ஆய்வு நடத்தினார். சசிகலா சிறைவைக்கப்பட்டுள்ள பெண்கள் பகுதிக்கும் சென்றுள்ளார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர், கவுரி லங்கேஷை கொலை செய்தவர்கள் விரைவில் இதே சிறையில் அடைக்கப்படுவார்கள். மேலும் சிறைச்சாலையில் யாருக்கும் சலுகைகள் கொடுக்கப்படவில்லை. சசிகலா உள்ளிட்ட அனைவரும் சிறை விதிமுறைப்படியே நடத்தப்படுகிறார்கள் என்று தெரிவித்தார். இதனிடையே, சிறைக்குள் ஆய்வு செய்தபோது, சசிகலாவை தமிழில் நலம் விசாரித்தார் கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டியின் மனைவி மதுரைக்காரர். அவரது வீட்டில் தமிழ் நாளிதழ்கள் வாங்கப்படுவது வழக்கம். எனவே ஓரளவுக்கு தமிழ் பேச அறிந்த ராமலிங்க ரெட்டி, சசிகலாவிடம் தமிழில்தான் பேசியதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசியல்வாதிகளைப் பொறுத்த வரை சிறைத் தண்டனைகள் எல்லாம் வெறுமனே அரசியல்தான் என்பதை நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பது தான் இதிலிருந்து நாம் உணர்வது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.