நீட் தேர்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து- நடுவண் பாஜக அரசைக் கண்டித்து காங்கிரஸ் நாளை போராட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பு. 11,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகள் அறிவிக்கப்பட்ட நாளில் கண்டிப்பாக நடைபெறும் என்று நடுவண் பாஜக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஆனால், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு இந்த தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இவைகள் தொடர்பாக நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எதிர்க்கட்சிகளை சேர்ந்த 7 முதல்வர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் கொரோனா பரவலுக்கு நடுவே நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகள் நடத்துவதை கண்டித்து அடாவடி பாஜக அரசுக்கு எதிராக நாளை (வெள்ளிக்கிழமை) நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது. மாநில தலைநகரங்கள் மற்றும் மாவட்ட தலைநகரங்களில் நடுவண் அரசு அலுவலகங்கள் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள் என கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



