தமிழகத்தில் நாளை முதல் தொடங்குவதாக உள்ள விமான சேவையை தொடங்க வேண்டாம் என வலியுறுத்தி தலைமைஅமைச்சர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார் 11,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனவின் ஊற்றுக்கண் சீனாவின் உகான் நகரம் என்றால்- கொரோன பரவலுக்கு பெரும்பங்களிப்பு ஆற்றியவைகள் விமான நிலையங்கள். இந்த நிலையில் நடுவண் அரசு விமான நிலையங்களுக்கு தளர்வு அறிவித்திருப்பது, அறிவாளர்களுக்கு அதிர்ச்சியூட்டுவதாக இருக்கிறது. தமிழகத்தில் நாளை முதல் தொடங்குவதாக உள்ள விமான சேவையை தொடங்க வேண்டாம் என வலியுறுத்தி தலைமைஅமைச்சர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார் கொரோனா முழு முடக்கத்தில் இருந்து சில தளர்வுகளை நடுவண் அரசு அறிவித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவை நாளை முதல் மீண்டும் தொடங்கப்படும் என்று இந்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதையடுத்து, உள்நாட்டு விமான சேவையை தொடங்கும் வகையில் அனைத்து விமான நிலையங்களுக்கும், பயணிகளுக்கும் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய விமான நிலைய ஆணையம் வெளியிட்டது. அதேசமயம், விமான சேவை மீண்டும் தொடங்கும் போது, விமான நிறுவனங்கள் அதிக கட்டண வசூல் நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு, உள்நாட்டு விமான பயணத்திற்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கட்டணங்களை நிர்ணயித்து நடுவண் அரசு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் நாளை முதல் விமான சேவை தொடங்க வேண்டாம் என்று; மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் அனுப்பி உள்ளார். அதில், தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ள முதல்வர், நாளை தமிழகத்தில் விமான சேவை தொடங்க வேண்டாம் எனவும், அடுத்த மாதம் பார்த்துக் கொள்ளலாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



