Show all

எகிறும் எதிர்பார்ப்புகளுடன் கீழடி! ஆறாம் கட்ட அகழாய்வுப் பணி தொடங்கியது மணலூரில்

நான்காம் கட்ட அகழாய்வின் அறிக்கை வெளியாகி பெரும் பரப்ரப்பை ஏற்படுத்தியது கீழடி. தற்போது மணலூரில் ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

10,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: கீழடி என்னும் தொல்நகரம். தமிழர் நாகரிகம் சுமார் 2600 ஆண்டுகளுக்கு முந்தைய, ஒரு கட்டமைக்கப்பட்ட நகர நாகரிகமென்பதை நிறுவவதற்கான சான்றுகளுடனும், மேலும் மேலும் ஏராளமான வியக்கத்தக்க வரலாற்று உண்மைகளுக்கு கட்டியங்கூறும் விதமாக அமைந்த ஆய்வுகள்தான் கீழடி ஆய்வுகள்.

இதுவரை ஐந்து கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன. அண்;மையில் 4ஆம் கட்ட அகழாய்வின் அறிக்கை வெளியாகி பெரும் பரப்ரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், 6ம் கட்ட அகழாய்வு பணியானது இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட நான்கு இடங்களில் அகழாய்வு பணிகள் நடத்த திட்டமிட்ட நிலையில், மணலூரில் மட்டும் இடம் தேர்வு செய்வதில் இழுபறி நிலவி வந்தது.

இதற்கிடையில், கொரோனா நுண்ணுயிரி பரவலால் பணிகள் நின்றுவிட்ட நிலையில், இன்று அகழாய்வுப் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. இதற்காக மணலூரிலும் இடம் தேர்வு செய்யப்பட்டு இன்று முதல் பணிகள் தொடங்கப்பட உள்ளன.

கீழடி அகழாய்வுக்காக பல உழவர்களும் தங்கள் நிலத்தை அளித்துள்ளனர். மணலூரில் சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் இந்தப் பணி இன்று தொடங்கியுள்ளது. அதற்கான இடத்தை அழகுமலர் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் வி.மலைச்சாமி மற்றும் பேராசிரியர் முத்துச்சாமி ஆகியோர் அளித்துள்ளனர்.

தமிழக தொல்லியல் துறையின் துணை இயக்குநர் முனைவர்.சிவானந்தம் தலைமையில் நான்கு அதிகாரிகளும் 10 கள ஆய்வாளர்களும் கொண்ட குழுவினர் இந்த அகழாய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்தப்ப் அணிகள் தொடங்கியிருக்கும் நிலையில், வரலாற்றின் இன்னும் பல முதன்மையான ஆதாரங்கள் ஏதும் கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு பெருகியுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.