Show all

தனியார் பள்ளிகளின் பம்மாத்தும்- தமிழக அரசின் மிரட்டலும்!

கோபியில், கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன், தனியார் பள்ளிகளில், கல்வி கட்டணம் வசூலிப்பது குறித்து, கூர்ந்து கவனித்து வருகிறோம். தற்போதைய இக்கட்டான சூழலில், ஆதாரத்துடன் புகார் வந்தால், சம்பந்தப்பட்ட பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

11,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: ஊரடங்கில் குழந்தைகள் பள்ளிக்கு வராத நிலையில், அவர்களிடம் எப்படி கட்டணம் கேட்பது என்கிற அச்சம் தனியார் பள்ளிகளுக்கு இயல்பாகவே இருந்து வருகிறது.

இந்த நிலையில், ஈரோடு மாவட்டம், கோபியில், கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறியதாவது: தனியார் பள்ளிகளில், கல்வி கட்டணம் வசூலிப்பது குறித்து, கூர்ந்து கவனித்து வருகிறோம். தற்போதைய இக்கட்டான சூழலில், ஆதாரத்துடன் புகார் வந்தால், சம்பந்தப்பட்ட பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தனியார் பள்ளிகள்- பிள்ளைகளின் பாடத்தை பெற்றோர்களுக்கு புலனத்தில் அனுப்பி அவர்களை ஆசிரியர்களாக இருந்து குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்க பயிற்றுவித்து, எப்படியாவது கட்டணம் கறந்து விடலாம் என்று பம்மாத்து காட்டி வருகின்றன. 

பெரும்பாலான பெற்றோர்கள்- இந்தப்பள்ளியில் தானே நம் குழந்தைகள் தொடர்ந்து படித்தாக வேண்டும். பள்ளிகள் கேட்டால் கட்டணத்தைச் செலுத்திவிடலாம் என்று இருக்கின்றனர். சில பெற்றோர்கள், ‘பாடம் நடத்தாமலே கட்டணமா, பள்ளிக்கு போகாமலே கட்டணமா’ என்று எகிறத் தயாராய் இருக்கின்றார்கள்.

பள்ளிகள் திறந்தால்தாம் இதற்கெல்லாம் தீர்வு என்று தனியார் பள்ளி முதலாளிகள் அரசின் அறிவிப்பை எதிர் நோக்கி காத்திருக்கிறார்கள். இந்த நிலையில், பொதுத்தேர்வு முடிந்த பின், பள்ளிகள் திறப்பு மற்றும் மாணவர் சேர்க்கை தேதி அறிவிக்கப்படும் என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.

ஆம். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்த பின், பள்ளிகள் திறப்பு மற்றும் மாணவர் சேர்க்கை தேதி அறிவிக்கப்படும். அதன்பின், அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு, செங்கோட்டையன் கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.