இருவர் மட்டுமே கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருந்த நிலையில் அந்த இருவரும் கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்ததையடுத்து கொரோனா இல்லாத மாநிலமாக திரிபுரா மாறியுள்ளது. 11,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: இந்தியாவில் 21 ஆயிரத்து 700 பேருக்கு கொரோனா நுண்ணுயிரித் தொற்று பரவியுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 4 ஆயிரத்து 325 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், நாடு முழுவதும் இதுவரை 686 பேர் உயிரிழந்துள்ள சோகமும் நிகழ்ந்துள்ளது. கொரோனா நுண்ணுயிரி பரவுவதை தடுக்கும் விதமாக, நாட்டுமக்கள் விலைகொடுப்பில், நடுவண் அரசின் அதிகாரப்பாட்டு ஊரடங்கு நாடு முழுவதும் மே3 வரை ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், திரிபுரா மாநிலத்தில் 2 பேருக்கு மட்டுமே கொரோனா நுண்ணுயிரி பரவி இருந்தது. அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். அம்மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட அந்த இருவரும் தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அம்மாநில முதல்வர் பிப்லாப் குமார் டேப் தெரிவித்துள்ளார். ஆனாலும், திரிபுரா மாநிலத்தில் 111 பேர்களுக்கு கொரோனா இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும், 227 பேர் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் குமார் டேப் தெரிவித்துள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



