தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவது, தமிழகத்திற்கான மகிழ்ச்சி செய்தியாகும். 11,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவும் வேகம் அதிகரித்துள்ளது. எனினும் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளைப் போன்று இந்தியாவில் கொரோனா நுண்ணுயிரி படுவேகமாக பரவவில்லை. அதேசமயம் நோய்த்தொற்று ஏற்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவோரில் பலர் குணமடைந்து வீடு திரும்புவது ஆறுதல் அளிக்கும் நல்ல செய்தியாகும். தமிழகத்தில் மருத்துவ உள்கட்டமைப்பு சிறப்பான முறையில் இருப்பதாலும், மருத்துவர்களின் அயராத கவனிப்பாலும் நோய்த்தொற்று ஏற்பட்டவர்களில் பலர் குணமடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக குணமடைந்தோர் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 752 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 1683. இதுவரை 20 பேர்கள் உயிரிழந்துள்ளனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



