ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் நிவாரணமாக குறைந்தது ரூ.7500 வழங்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா வலியுறுத்தியுள்ளார். இணையத்தில் இன்றைய தலைப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது இந்தச் செய்தி 11,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: தலைமைஅமைச்சர் மோடிக்கு, கொரோனா நுண்ணுயிரிக்கு எதிரான போராட்டத்தில் ஒத்துழைப்பு கொடுப்பது பற்றி யோசனைகளை வழங்கினேன். ஆனால், எதுவும் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஒருமைப்பாடு தேவைப்படும் நேரத்திலும் கூட பாஜக வெறுப்பு நுண்ணுயிரியைப் பரப்புகிறது. நமது சமூக நல்லிணக்கத்திற்கு பெரும் சேதம் ஏற்படுகிறது. அந்த சேதத்தை சரிசெய்ய காங்கிரஸ் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். முதல்கட்ட ஊரடங்கால் 12 கோடி வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளன. பொருளாதார நடவடிக்கைகள் அசையா நிலையில் இருப்பதால் வேலையின்மை மேலும் அதிகரிக்கும். இந்த நெருக்கடியை எதிர்கொள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் நிவாரணமாக குறைந்தது 7,500 ரூபாயை வழங்க வேண்டியது அவசியம். இவ்வாறு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தெரிவித்துள்ளார். சமூக வலைதள ஆர்வலர்கள் இந்தச் செய்தியை வரவேற்று, ‘கொடு ரூ.7,500 ஊரடங்கு நிவாரணம்’ என்ற முழக்கத்தை தலைப்பாக்கி வருகின்றார்கள்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



