Show all

மோடியை எதிர்க்க யாரும் கிடையாதா வெறுப்பின் உச்சத்திற்கே சென்று விட்ட நிதிஷ் குமார்

2019 நாடாளுமன்றத் தேர்தலில் மோடியை எதிர்த்து நிற்க யாருமே கிடையாது என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கூறியுள்ளார்.

பிகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதாதளமும், ராஷ்ட்ரீய ஜனதாதளமும் இணைந்து மெகா கூட்டணி அமைத்து சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றது. கூட்டணி ஆட்சி சுமார் 2 ஆண்டுகளை எட்டியிருந்த நிலையில் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது.

லாலு பிரசாத் யாதவுடன் கை கோர்த்து ஆட்சியைப் பிடித்து ஆட்சி செய்து வந்த நிதிஷ் குமார் தற்போது பாஜக ஆதரவுடன் ஆட்சியில் நீடித்து வருகிறார். இந்த அவலத்தை தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடியை எதிர்க்க யாருமே இல்லை என்று முழங்கியுள்ளார்.

இதுகுறித்து பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ் குமார், உண்மையில் மோடி மீண்டும் வெற்றி பெறுவதைத் தடுக்கும் வலிமை யாரிடமும் இல்லை. இதுதான் எதார்த்தம்.

என்னை மோடிக்கு எதிரான சரியான போட்டியாளர் என்று கூறுவதை நான் ஏற்க மாட்டேன். நான் மோடியைப் போட்டியாக நினைக்கும் அளவிற்கு வலிமை அற்றவன் என்று கூறினார் நிதிஷ் குமார்.

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலின்போது மோடியை எதிர்க்க யாரும் இல்லை, என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு அறைகூவல் விடுத்துள்ளார் நிதிஷ் குமார். என்ன செய்யப் போகிறார்கள் எதிர்க்கட்சிகள்?

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.