Show all

3-வது டெஸ்டில் 239 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இங்கிலாந்து

இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்தும் இரண்டாவது டெஸ்டில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றன. இந்நிலையில் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் தென் ஆப்பிரிக்காவை 239 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து முதல் இன்னிங்சில் 353 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 112 ரங்களும், அலஸ்டைர் குக் 88 ரன்களும் குவித்தனர். தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் மோர்கல், ரபாடா ஆகியோர் அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள். பின்னர் ஆடிய தென்ஆப்பிரிக்கா அணி 175 ரன்னில் சுருண்டது. இங்கிலாந்து அணி சார்பில் ரோலண்ட்-ஜோன்ஸ் 5 விக்கெட்டுகளையும் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

178 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 313 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதனால் 492 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்கா அணி 252 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் 239 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி சார்பில் மொயீன் அலி நான்கு விக்கெட்டும், ரோலண்ட்-ஜோன்ஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். மொயீன் அலி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளுக்கு இடையிலான நான்காவது மற்றும் கடைசி போட்டி மான்செஸ்டரில் ஆகஸ்ட் 4-ந்தேதி தொடங்குகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.