வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படும் 14.2 கிலோ எடைகொண்ட சமையல் எரிவாயு உருளைகள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. ஆண்டுக்கு 12 உருளைகளை மானிய விலையில் பெற்றுக்கொள்ளலாம். அதற்கு மேல் தேவைப்படும் உருளைகளை சந்தை விலை கொடுத்து வாங்க வேண்டும். அதாவது கூடுதலாக வாங்கும் உருளைகளுக்கு மானியம் கிடையாது. சமையல் எரிவாயு உருளையின் விலையை உயர்த்தும் அதிகாரத்தை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவற்றுக்கு நடுவண் அரசு வழங்கி இருக்கிறது. அதன்படி கடந்த ஆண்டு சூலை 1 முதல் சமையல் எரிவாயு உருளையின் விலை வாட் வரி நீங்கலாக மாதம் தோறும் ரூ.2 உயர்த்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே சரக்கு சேவை வரி அமலுக்கு வந்ததை தொடர்ந்து கடந்த சூலை 1அன்று உருளையின் விலை 32 ரூபாய் உயர்த்தப்பட்டது. தற்போது வாட் வரி நீங்கலாக இனி மாதம்தோறும் 4 ரூபாய் உயர்த்துமாறு எண்ணெய் நிறுவனங்களுக்கு நடுவண் அரசு உத்தரவிட்டு இருக்கிறது. மேலும், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் சமையல் எரிவாயு மானியம் ரத்து ஆகிறது. மானியம் இனி வங்கிக் கணக்கில் சேர்க்கப் படும் என்று மோடி அரசு அறிவித்த போதே, ‘ஆமா இப்ப இப்படி சொல்லுவானுக. நாளைக்கு அதுவும் இல்லையின்னுருவானுக’ என்று மக்கள் முனுமுனுத்த படிதாம், எரிவாயு மானியத்திற்கு மோடி ஆட்சி அடித்தது ஆப்பு. மோடிக்கு மக்களால் அடிக்கப் படும் ஆப்பை வலிமை படுத்திக் கொள்ளும் முயற்சிதான் இந்த எரிவாயு மானிய ரத்து.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



