Show all

தமிழகத்தில் கொரோனா பரவல் எழுபது நாட்களின் நிலவரம்! அடுத்து என்ன செய்யலாம்? ஓர் ஆலோசனை

கடந்த எழுபது நாட்களில் தமிழக நலங்குத்துறை சிறப்பாகச் செயல்பட்டு, தமிழகத்தில் கொரோனா அயல்பரவலுக்கு வாய்ப்பானவர்கள் இவர்கள் என, இதுவரை 2 லட்சத்து 9 ஆயிரத்து 284 பேர்களை அடையாளம் கண்டுள்ளது. அவர்களின் செல்பேசிகளை அழைத்தால் அவர்களின் கொரோன நிகழ்நிலை குறித்த தகவலை பெறும் அமைப்பை எளிதாக உருவாக்க முடியுமே அரசு. உருவாக்கினால் என்ன என்பதே ஆலோசனை.

16,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சீனாவில் புதிய வகை கொரோனா நுண்ணுயிரி கடந்த கிழமையிலிருந்து பரவி வருகிறது. முதலில் இது கடல் உணவு மற்றும் இறைச்சி சந்தையில் விலங்குகளிடம் இருந்து பரவியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் புதிய நுண்ணுயிரி தற்போது மனிதனிலிருந்து மனிதனுக்குப் பரவும் என்று சீனாவின் மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. 

குவாங்டாங், வுகான் ஆகிய மாகாணங்களில் இந்த நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 1.1. கோடி பேர் வசித்து வரும் வுகானில் 100க்கும் மேற்பட்டவர்களிடம் இந்த தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு மருத்துவச் சிகிச்சை அளித்த நிலையில் 15 மருத்துவ பணியாளர்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வகை காய்ச்சல் ஏற்பட்டால் சுவாசத்தில் பிரச்சினை ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும். இந்நிலையில் இந்த பாதிப்பினால் 9 பேர் வரை உயிரிழந்துள்ளதாகச் சீனா தெரிவித்துள்ளது.

தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனோ நுண்ணுயிரிக்கு இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் சீனாவிலிருந்து இந்தியா வரும் விமான பயணிகளிடையே தீவிர மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்தச் செய்தி முன்னெடுக்கப்பட்ட நாள்: 08,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121 (22.01.2020)

இதனிடையே இந்தியாவில் அனைத்து விமான நிலையங்களிலும் தீவிர சோதனை நடத்த நடுவண் நலங்குத் துறை உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய முதன்மை விமான நிலையங்களில் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

சீனாவின் ஹாங்காங்கில் இருந்து, சென்னைக்கு அன்றாடம் நள்ளிரவு, 12:30 மணிக்கு, கேத்தே பசிபிக் விமானம், நேரடி சேவையாக வந்து, மீண்டும் அதிகாலை, 2:00 மணிக்கு, ஹாங்காங் புறப்பட்டுச் செல்லும். இந்நிலையில் இந்த விமானத்தில் வரும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. முந்தா நாள் நள்ளிரவு முதல் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. முந்தாநாள் வந்த 368 பயணிகளுக்குச் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் யாருக்கும் இந்த நுண்ணுயிரித் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது.

ஒருவேளை பயணிகளுக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டால் அவர்களைத் தனி சடுதி வண்டி மூலம் தண்டையார்பேட்டையில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக தமிழக நலங்குத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழகத்தில் யாருக்கும் இந்த பாதிப்பு இல்லை என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இப்படி கொரோனா ஊற்றுக்கண்ணில் இருந்து, தமிழக நலங்குத்துறையின் கொரோன அடையாளம் காணும் பணி தொடர்ந்து அறுபத்தி இரண்டு நாட்கள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது பாராட்டிற்குரியதாகும்.

இந்தப்பணி, இந்தியாவில் அனைத்து பயணிகள் விமானங்களும் இந்திய நடுவண் அரசு இரத்து செய்து அறிவித்த நாளான 21.03.2020 அன்றிலிருந்து தேவைப்படாமல் போனது. 

இந்த அறுபத்தியிரண்டு நாட்களில் தமிழக நலங்குத்துறை கொரோனா பாதிப்பு வாய்ப்புக்கு என சோதனை செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை: தமிழக விமான நிலையங்களில் இதுவரை 2 லட்சத்து 9 ஆயிரத்து 284 பேருக்கு முதற்கட்ட பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 15 ஆயிரத்து 788 பேர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 86 ஆயிரத்து 644 பேரின் தகவல்கள் குடியுரிமை ஆணையத்திடம் இருந்து பெறப்பட்டு அவர்களுக்கும் சோதனை செய்யப்பட்டு உள்ளது என்பதாகும். 

இவர்கள்தாம் தமிழகத்தில் கொரோனா அயல்பரவுதலை முன்னெடுப்பதற்கான ஊடகங்களாக அமைய வாய்ப்பு உள்ளவர்களாக இருந்து வருகிறார்கள். இவர்கள் மீது தமிழக நலங்குத்துறை தொடர்கண்காணிப்பில் ஈடுபட்டு தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் என்று அன்றாடம் இரண்டு மூன்று என்று கூடும் எண்ணிக்கையை கணக்கிட்டு இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் கொரோனாவல் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 42 ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக நலங்குத்துறை தெரிவித்துள்ளது.

இங்கேதான் நமக்கு ஒரு கேள்வி:- வங்கிகள் என்றாலே கடன் கொடுத்து வாங்க வேண்டும். நிறைய பேர்களின் கடன்கள் வாராக் கடன்கள் ஆகிவிடுகின்றன. இதனால் வங்கிகள் ஒட்டு மொத்த கடன் கொடுப்பையே நிறுத்தி விடுவதில்லை. மாறாக தங்களுக்குள் சிபில் என்கிற ஒரு அமைப்பை நிறுவி, கடன் வாங்கி, கட்டிய தகுதியாளர்கள் என்று இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஒரு மதிப்பெண்ணை கொடுத்து இவருக்கு யார் வேண்டுமானலும் கடன் கொடுக்கலாம் அல்லது கொடுக்கக் கூடாது என்கிற அடையாளத்தை நம்மை அறியாமலே நம்மை பட்டியல் இட்டு வைத்திருக்கிறது. 

நாம் ஒரு வங்கிக்கு கடன் கேட்கப் போனாலே, முதல்வேளையாக நமது பெயரை சிபிலில் தேடுகிறார்கள். நாம் இந்த இந்த மாதம் இவ்வளவு செலவு செய்திருக்கிறோம். இந்த வங்கியில் கடன் வாங்கிவிட்டு தவணை செலுத்தாமல் இழுத்தடிக்கிறோம் என்றெல்லாம் சிபில் அவர்களுக்கு சொல்லி விடுகிறது. 

இன்றைய நிலையில் நான் எனது மாத வருமானத்திற்கான வேலையைச் செய்யமுடியாமல் அரசு அறிவித்த 21நாள் ஊரடங்கில் இருக்கிறேன். வெளியில் யாரோடோ நான் தொடர்பு கொண்டு கொரோனா பரவலுக்கு வழிவகுத்து விட முடியுமாம். சரி மகிழ்ச்சி! நாட்டிற்காக இந்த 21நாள் ஊரடங்கில் என்னுடைய சம்பள இழப்பு ஓர் அர்ப்பணிப்பாக இருந்து விட்டு போகட்டும். 

22வது நாளில் நான் எனது பணியை தொடரும் வகைக்கு எல்லாம் சரியாக்கப்பட்டு விடுமா? எங்கிருந்தும் எந்த விடையும் இல்லை. 

இங்கேதான் நமக்கு ஒரு கேள்வி:- இந்தியாவில் செல்பேசி இல்லாதவர்கள் இல்லை. வங்கிக்கு சிபிலில் கடனாளர்கள் தகுதி போல- 
பாமர மக்களுக்கு அவர்கள் சம்பளப் பணியைத் கொரோனா பரவல் இல்லாமல் தொடர: 
சக மனிதர்களின் கொரோன பாதிப்புள்ளவர்களை அவர்கள் செல்பேசியில் அழைத்தால், அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறது அல்லது இல்லை என்பதை அறிந்து கொள்ளும் வகையாக அரசு ஒரு அமைப்பை உருவாக்கி பாமரமக்கள் சம்பளப் பணியில் தொடர உதவினால் 21 நாட்களுக்குப் பிறகு ஊரடங்கு தேவைப்படாதே. 
அரசிடம்தான் கொரோனா பாதிப்பாளர் பட்டியல் இருக்கத்தானே செய்கிறது. அந்தப் பட்டியலை மேலும் செழுமைப்படுத்திட அரசால் எளிமையாக முடியுமே. 
யாருக்கும் கடன் கிடையாது என்பது போன்ற ஊரடங்கின் தேவையென்ன? தெரிந்தும் தெரியாமல் 21நாள் முன்னெடுக்கப்பட்டு விட்டது. சரி சிறப்பு! ஊரடங்கு தொடராமல் இருப்பதற்கு இந்த வழிவகையை முன்னெடுக்கலாமே. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.