Show all

குற்றங்கள் குறைய புதிய கண்டுபிடிப்பு! இனி காவல் நிலையங்களும் அறங்கூற்றுமன்றங்களும் அதிகம் தேவைபடாது

08,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பசுக்கறி உண்ணும் பழக்கம் நிறுத்தப்பட்டால் சாத்தானால் ஏவப்படும் ஏராளமான குற்றங்கள் நின்றுவிடக்கூடும். 

ஆர்.எஸ்.எஸ். செயற்குழு தலைவர் இந்திரேஷ் குமார் ஜார்கண்ட் மாநில தலைநகரான ராஞ்சியில் நடைபெற்ற ஹிந்து ஜகரான் மன்ச் அமைப்பின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய போது இந்த அரிய கண்டுபிடிப்பு கமுக்கத்தை வெளிப்படுத்தினார்.

அண்மையில் இதே மாநிலத்தில் சாமியார் அக்னிவேஷ் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த இந்திரேஷ் குமார், அவர் தாக்கப்பட்டது தவறானது, கண்டனத்துக்குரியது. ஆனாலும், கருத்து சுதந்திரம் என்னும் பெயரில் பிறரின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் பேச யாருக்கும் உரிமை இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் கும்பலாக சேர்ந்து சிலர் அடித்துக் கொல்லப்படும் சம்பவங்களும் கண்டனத்துக்குரியது. பசுக்கள் கொல்லப்படுவதை எந்த மதமும் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவும் அவர் தெரிவித்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,858. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.