08,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னையில் மாம்பலம் ரயில் நிலையத்தில் மின் கம்பி அறுந்ததால் மின்சார தொடர்வண்டி சேவை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் தொடர்வண்டி போக்குவரத்துக்கு எதிராக மக்கள் சென்னையில் போராட்டம் செய்துள்ளனர். சென்னையில் தற்போது பல்வேறு இடங்களில் மின்சார தொடர்வண்டி சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இருக்கின்ற தொடர்வண்டியில் ஏறுவதற்கு பயணிகள் முண்டி அடித்துக் கொண்டு சென்று இருக்கிறார்கள். இதனால் படிக்கட்டில் தொங்கியபடி பலர் பயணித்து இருக்கிறார்கள். இந்த நிலையில் படிக்கட்டில் தொங்கிய பயணிகள் மின்சார கம்பி தாக்கி கீழே விழுந்துள்ளனர். மின்சார தொடர்வண்டி படிக்கட்டில் தொங்கிய 7 பேர் காயம் அடைந்துள்ளனர். மின்கம்பி மோதி தொடர்வண்டியில் தொங்கிய 5 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் தற்போது சென்னையில், தொடர்வண்டி துறைக்கு எதிராக மக்கள் போராடினார்கள். அந்த தொடர்வண்டியில் இருந்து இறங்கிய பயணிகள் உட்பட பல பயணிகள், ஒன்றாக சேர்ந்து தொடர்வண்டி நிர்வாகத்திற்கு எதிராக போராடினார்கள். முதன்மையாக பரங்கி மலையில் தொடர்வண்டி பயணிகள் அதிக அளவில் போராட்டம் செய்தனர். தொடர்வண்டியில் இருந்து பயணிகள் கீழே விழுவது தொடர்வதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதனால் தொடர்வண்டி வழியில் ஓரத்தில் உள்ள தடுப்பை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் செய்தனர். காவல்துறையினர் தலையிட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,858.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



