நேற்று அனிதா நீட்டை எதிர்த்தார்; சட்டத்தின் போக்கில். இன்று உதித் சூர்யா தொடங்கி சிலபலர் நீட்டை ஆதரிப்பதாக போக்கு காட்டி, வஞ்சகமாக நீட்டை எதிர்த்து குடும்பம் குடும்பமாக சீரழிந்து போக இருக்கிறார்கள். ஆள்மாறட்டத்தை அடித்து நொருக்கும் முகத்தோடு நீட் இனி வல்லாட்சி செய்யும். முந்தைய தலைப்பான நீட் எதிர்ப்பு முடித்து வைக்கப்படுகிறது. 09,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நேற்று அனிதா நீட்டை எதிர்த்தார்; சட்டத்தின் போக்கில். தோல்வியடைந்து அவராக செத்துப் போனார். இன்று உதித் சூர்யா தொடங்கி சிலபலர் நீட்டை ஆதரிப்பதாக போக்கு காட்டி, வஞ்சகமாக நீட்டை எதிர்த்து குடும்பம் குடும்பமாக சீரழிந்து போக இருக்கிறார்கள். ஆள்மாறட்டத்தை அடித்து நொருக்கும் முகத்தோடு நீட் இனி வல்லாட்சி செய்யும். முந்தைய தலைப்பான நீட் எதிர்ப்பு முடித்து வைக்கப்படுகிறது. தேனியை தொடர்ந்து கோவையிலும், நீட் நுழைவுத் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து, மேலும் 2 மாணவர்கள் தனியார் மருத்துவ கல்லூரியில் சேர்ந்ததாக புகார் எழுந்துள்ளது. ஆம். நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, கோவையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில், ஒரு மாணவி, ஒரு மாணவன் சேர்ந்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து மருத்துவ கல்வி இயக்குனரகத்துக்கு, சம்பந்தப்பட்ட தனியார் கல்லூரி புகார் கடிதம் அளித்துள்ளது. நீட் நுழைவுத்தேர்வு புகைப்படத்திற்கும், அனுமதி கடித புகைப்படத்திற்கும் வேறுபாடு உள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் நுழைவுத் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து, தேனி அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்த உதித் சூர்யா குடும்பத்தோடு கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது எழுப்பப்பட்டுள்ள புகார், அடுத்து அந்த ஊரில் இந்த ஊரில்; என்று வரப்போகிற புகார்களில், அடுத்து அடுத்து சிலபல குடும்பங்கள் சீரழிவுக்காக வெளியே வரத் தொடங்கி விட்டன. வெள்ளத்தால் போகாது வெந்தணலால் இன்றைய இந்திய, தமிழக அரசுகள் அந்த உள்ளத்தில் இருக்கிற கல்வியைக் கூட, நீட் என்கிற ஒரு தேர்வின் மூலம் மூளையைப் பிளந்து பார்த்து, ஆம் உள்ளத்தில் கல்வி இருக்கிறது என்று அறிய முடியும் என்று பொய்யுரைத்து சட்டத்தை வளைத்து ஆட்சி புரிகின்றன. வெள்ளத்தால் போகாது வெந்தணலால் -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,287.
வேகாது வேந்தராலும்
கொள்ளத்தான் முடியாது கொடுத்தாலும்
நிறைவொழியக் குறைபடாது
கள்ளர்க்கோ மிகஅரிது காவலோ
மிகஎளிது கல்வி என்னும்
உள்ளத்தே பொருளிருக்க உலகெலாம்
பொருள்தேடி உமல்வதேனோ!
என்று அன்றைய பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் பாடினான்.
வேகாது வேந்தராலும்
கொள்ளத்தான் முடியாது கொடுத்தாலும்
நிறைவொழியக் குறைபடாது
கள்ளர்க்கோ மிகஅரிது காவலோ
மிகஎளிது கல்வி என்னும்
உள்ளத்தே பொருளிருக்க உலகெலாம்
பொருள்தேடி உமல்வதேனோ!
என்ற அன்றைய பாண்டியமன்னன் நெடுஞ்செழியனின் பாடலை பொய்யாக்கி, எல்லோர் உள்ளத்திலும் கல்வியா? கல்வி பிறப்பால் வல்லாதிக்க சமூகத்திற்கு மட்டும் சாத்தியமானது என்று, வல்லாதிக்கத்தின் கோர முகத்தைக் காட்டி மக்களை அலைக்கழிக்கிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.