Show all

சாண்டியிடம் கூறிய கவின்! தன்னெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்.

09,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பிக்பாஸ் நிகழ்ச்சியின் 95-வது நாளிற்கான முதல் விளம்பரக் காணொளியை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. 100 நாட்கள் தொடந்து ஒளிபரப்பாகும், பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் மூன்றாவது பருவம் தற்போது 95-வது நாளை எட்டியுள்ளது.

பொன்அனுமதி மூலம் நேரடியாக முகேன் இறுதி சுற்றிற்கு தேர்வான நிலையில் வீட்டில் எஞ்சியுள்ள போட்டியாளர்கள் நட்புக்குழு அமைத்து பகைவர்களை வெளியேற்றி, 94நாட்களைக் கடத்தியவர்கள். எஞ்சியுள்ளவர்களில் யார் பிக்பாஸ் தலைப்பை வெல்வது என்பதில் ஒருவரை ஒருவர் முன்னே தள்ளி விட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

மக்களிடம் அதிகம் திட்டு வாங்குகிறவராகவும், அதே சமயம் வாக்குகள் பெறுவதில் முதன்மை பெறுகிறவராகவும் உள்ளார் கவின். ஆனால் கவின் தனக்குள் அசிங்கப் பட்டே நிற்கிறார். 

இந்நிலையில் நேற்று ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில் பிக்பாஸ் முகேனைத் தவிர மற்ற 5 போட்டியாளர்களுக்கு ஒரு வாய்ப்பை அளிக்கிறார். அதாவது, போட்டியில் இறுதியில் வெற்றி பெறும் நபருக்கே ரூபாய் 50 லட்சம் வழங்கப்படும். அதற்கு முன்னர் ரூ.5 லட்சம் தொகையைப் பெற்றுக் கொண்டு இப்போதே வெளியேறத் தயாராக இருப்பது யார் என்று கேள்வி எழுப்புகிறார் பிக்பாஸ். அதற்கு முதலாவதாக எழுந்த கவின் நான் இந்த தொகையைப் பெற்றுக்கொண்டு வீட்டை விட்டு வெளியேற தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்தார் நேற்று.

இந்நிலையில் 95-வது நாளிற்கான முதல் விளம்பரக் காணொளியை நிகழ்ச்சி குழு இன்று வெளியிட்டுள்ளது. அதில், இன்னும் பத்து நாட்கள் தானே உள்ளது என்று சாண்டியிடம் கூறும் கவின், வீட்டை விட்டு வெளியேறும் முடிவை தான் முன்னதாகவே எடுத்துவிட்டதாக கூறினார்.

மேலும், இந்த வீட்டில் இவ்வளவையும் பண்ணிட்டு கூச்சமே இல்லாம மேடையில வந்து என்னால நிக்க முடியாது என்றும் கவின் தெரிவித்துள்ளார். சரிதான்-
தன்னெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின் 
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,287.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.