Show all

நாம் ஊரடங்கு அறிவித்து விட்டு வீடடங்கி இருப்பது நமக்கு சரி! இவர்களுக்கு என்ன வழி? ஒரே மருத்துவமனையில் 40 செவிலியர்களுக்கு கொரோனா தொற்று

மகாராஷ்டிராவில் ஒரே மருத்துவமனையில் பணியாற்றிய 40 செவிலியர்களுக்கு கொரோனா தொற்று. நாம் வீடடங்கி இருப்பதற்கு ஊரடங்கு உத்தரவு அறிவித்து விட்டதை நடுவண் அரசு பெருமையாகக்   கருதி விட முடியாது. அதற்கான பெரும் விலையை வீடடங்கி இருக்கும் மக்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் நடுவண் அரசு செய்ய வேண்டுவதாக, நாம் மீண்டும் மீண்டும் பதிவிட்டு வருவது இதுதான். 1.சோதனை சோதனை 2.பாதுகாப்பு கருவிகள் 3.மருந்துகளுக்காக அனைத்து மருத்துவ முறையினரும் களமிறங்கியாக வேண்டும். நடுவண் அரசு துணிச்சலாக அவர்களுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

25,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மகாராஷ்டிராவில் ஒரே மருத்துவமனையில் பணியாற்றிய 40 செவிலியர்களுக்கு கொரோனா தொற்று. நாம் வீடடங்கி இருப்பதற்கு ஊரடங்கு உத்தரவு அறிவித்து விட்டதை நடுவண் அரசு பெருமையாகக்   கருதி விட முடியாது. அதற்கான பெரும் விலையை வீடடங்கி இருக்கும் மக்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். 

நாம் பெரும் விலையைக் கொடுத்துவிட்டு வீடடங்கி இருக்கிறோம். மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், நலங்குத்துறையினர், காவல்துறையினர். நமது கட்டயத் தேவைகளுக்காக வெளியில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்கள் சொந்தமாக வீட்டில் தயாரித்த முகக்கவசத்தையும், கைக்குட்டையையும் கட்டிக்கொண்டு உயிரைப் பணயம் வைத்து களத்தில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். 

அவர்களுக்கு கைத்தட்டுவதும், விளக்கணைத்தேற்றுவதும் மாற்றுத்திறனாளிகள் முன்னெடுக்கிற வேலை மாபெரும் வலிமை மிகுந்த நடுவண் அரசு செய்கிற வேலையன்று. 

உண்மையில் நடுவண் அரசு செய்ய வேண்டுவதாக, நாம் மீண்டும் மீண்டும் பதிவிட்டு வருவது இதுதான். 1.சோதனை சோதனை சோதனைக் கருவிகள் 2.பாதுகாப்பு கருவிகள் 3.மருந்துகளுக்காக அனைத்து மருத்துவ முறையினரும் களமிறங்கியாக வேண்டும். இந்திய மருத்துவ முறைகளுக்கு கொரோனாவைக் குணப்படுத்தும் கெத்து இருக்கிறது மருத்துவர்கள் கெத்தாக எழுந்திருங்கள். நடுவண் அரசு துணிச்சலாக அவர்களுக்கு ஒத்துழைக்க வேண்டும்.
 
நெஞ்சு பொறுக்க வில்லை! மகாராஷ்டிராவில் ஒரே மருத்துவமனையில் பணியாற்றிய 40 செவிலியர்களுக்கு கொரோனா தொற்று. இந்தியாவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் இதுவரையில், 881 பேர் கொரோனா நுண்ணுயிரியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், மகாராஷ்டிராவில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய கேரளாவைச் சேர்ந்த 40 செவிலியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த மருத்துவமனையில் 51 பேருக்கு கொரோனா நுண்ணுயிரித் தாக்கம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் 40 பேர் கேரளாவில் இருந்து மகாராஷ்ட்ராவுக்கு சென்று தங்கி பணியாற்றிய செவிலியர். மும்பையில் உள்ள அந்த மருத்துவமனையில் மட்டும் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோரிடம் இருந்து செவிலியர்களுக்கு தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் 40 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து 150-க்கும் மேற்பட்ட செவிலியர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர்.

களத்தில் இருப்பவர்களுக்கு பாதுகாப்பு வசதிகளை நடுவண் அரசு முழுமையாக உறுதிப் படுத்தியாக வேண்டும். அதுவும் செவிலியர்களுக்கே பாதுகாப்பு இல்லையென்றால் நினைத்தாலே நெஞ்சம் நடுங்குகிறது. சென்னையில் தனியார் உணவகங்களில் எல்லாம் இயந்திர மனிதர்கள் பணிக்கு அமைக்கப்பட்டிருக்கின்றன. மிகவும் பாதுகாப்பு தேவையான கொரோனாவிற்கு எதிராக இயந்திர மனிதர்களை பணிக்கு அமைப்பதில் என்ன தடை? சாத்தியம் இல்லாமல் எதுவும் இல்லை. வான்வெளிப் பயணம் செல்லுகிறவர்கள், கடல் ஆழத்தில் ஆய்வுப்பணியில் ஈடுபடுகிறவர்களுக்கென்று நூறு விழுக்காடு பாதுகாப்பான முகக்கவசங்கள் எல்லாம் சந்தையில் இருக்கத்தான் செய்கிறது. 

நடுவண்அரசு இவைகளை வாங்கிதருவதற்கு வீடடங்கி இருக்கிற அனைத்துத் துறை அதிகாரிகளையும் களம் இறக்குங்கள் இனியும் கொரோனாவிற்கு சிகிச்சை அளிப்பவர் ஒருவர் கூட பாதிக்கக் கூடாது என்று மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.