Show all

வேட்புமனுவில் மோடி குறித்த சொத்து! இணையத்தில் தீயாகி வருகிறது: கடந்த தேர்தல்களில் அவர் மனைவி குறித்து குறிப்பிடாதது போல

கடந்த பல தேர்தல்களில் மோடி மனைவி குறித்து குறிப்பிடாதது கேள்விக்குள்ளாக்கப் பட்டு, கடந்த முறையும் இந்த முறையும் மனைவி யசோதா பென் என்று குறிப்பிட்டு வருகிறார். இந்த முறை அவர் குறிப்பிட்டிருக்கிற சொத்துக் கணக்கின் மீது கேள்வி எழுப்பப் பட்டுள்ளது. விரைவில் மோடியின் உண்மையான சொத்தின் நிலவரம் வெளிவருமா? என்பது மக்கள் தளத்தின் பேச்சாக இருக்கிறது 

13,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: மோடி முதல் முறையாக, தான் திருமணமானவர் என்பதை வெளிப்படியாக ஒப்புக்கொண்டுள்ளார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர் பதிகை செய்த மனுவிலேயே தனது மனைவி தொடர்பான தகவல்களை முதல் முறையாக, அதிகாரப்பூர்வமாக, பகிரங்கமாக பதிவு செய்திருக்கிறார்.
குஜராத் முதல்வராக 13 ஆண்டுகளாக பதவியில் இருக்கும் நரேந்திர மோடி, இதுவரை தான் போட்டியிட்ட எந்தத் தேர்தலின் போதும் தனது குடும்பப் பின்னணி குறித்த விவரத்தை தெளிவுப்படுத்தியது இல்லை. தற்போது நடைபெறும் மக்களவை தேர்தலுக்காக, குஜராத் மாநிலத்தில் உள்ள வதோர தொகுதியில் நேற்று வியாழக்கிழமை அவர் வேட்புமனுவை பதிகை செய்தபோது தனக்கு திருமணமான விவரத்தை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து மூன்று முறையாக குஜராத் மாநிலத்தின் முதல்வராக தற்போது வரை நீடிக்கும் மோடி, இதுவரை தேர்தலில் போட்டியிடுவதற்காக ஒவ்வொரு முறையும் வேட்புமனுவை பதிகை செய்த போதும், தனக்கு திருமணம் ஆனது என்கிற விவரத்தை அளிக்காமல் அதற்கான பகுதியை காலியாகவே விட்டு வைத்துள்ளார்.
முன்னதாக நரேந்திர மோடியின் மனைவி யசோதாபென், குஜராத் மாநிலத்தில் வசித்து வருவதாக அவ்வப்போது சில செய்திகள் இந்திய ஊடகங்களில் வெளியானதை அடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளின் தலைவர்கள், இந்த முறை நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட வேட்புமனுவை பதிகை செய்யும் போது தனது மனைவி குறித்த விவரங்களை தெளிவுப்படுத்த வேண்டும் என்று கோரி வந்தனர்.
இதனையடுத்து தற்போது நரேந்திர மோடி, தனது வேட்புமனுவை பதிகை செய்யும் போது அளித்துள்ள உறுதி மொழியில் தனக்கு திருமணமான விவரத்தை தெளிவுப்படுதியுள்ள போதும், அவர் மனைவி சார்ந்த சொத்து விவாகாரத்தை அவர் அளிக்காதது புதிய சர்ச்சையை உருவாக்க வாய்ப்பு உள்ளதாக சட்டவல்லுனர்கள் கருதுகின்றார்கள்.
இந்நிலையில் இது தொடர்பாக இன்று விளக்கம் அளித்துள்ள நரேந்திர மோடியின் சகோதரர் சோமாபாய் மோடி, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாக அவரது ஒப்புதல் இல்லாமல் நடைபெற்ற சம்பராதய ரீதியிலான திருமணம் அது என்று குறிப்பிட்டுள்ளார். அந்தத் திருமணம் நடந்த சிலநாட்களிலேயே மோடி தனது வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும், அதற்குப்பிறகு மனைவி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் யாருடனும் மோடி தொடர்பு கொள்வது இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தங்களது பெற்றோர் படிக்காத ஏழைகள் என்பதாலும், ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய வாழ்க்கை முறையில், இது போன்று நிர்பந்த நிகழ்வுகள் சம்பிரதாய வாழ்க்கையாக மட்டும் பார்க்கப்பட்டதாலும் இந்தத் திருமணம் நடத்தப்பட்டது என்றும் நரேந்திர மோடியின் சகோதரர் தெரிவித்துள்ளார். திருமணம் முடிந்த உடன் நரேந்திர மோடி தமது வீட்டை விட்டு வெளியேறி விட்டதால், யசோதாபென் அவரது பெற்றோர்களுடன் சென்று தங்கி தனது படிப்பை தொடர்ந்தார் என்ற தகவலையும் அவர் தெரிவித்திருக்கிறார். இந்தச் செய்தி கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு மோடி தேர்தலில் போட்டியிட்ட கதை. 
இந்தக் கதையைத் தொடர்ந்து, மோடி குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தலில் பதிகை செய்த வேட்புமனுவில் மனைவி பெயர் என்ன என்ற இடத்தில் எதையும் குறிப்பிடாமல் இருந்தார். அதே நேரத்தில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் முதல்முறையாக தனது மனைவி பெயர் யசோதா பென் என்று வேட்புமனுவில் மோடி குறிப்பிட்டார். இதனால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி மோடி குற்றம் செய்துள்ளதாக கூறி குஜராத் மாநில ஆம் ஆத்மி கட்சி தலைவர்களில் ஒருவரான நிஷாந்த் வர்மா அம்மாநில காவல்துறையில் புகார் செய்தார். ஆனால் அவரது புகாரை காவல்துறையினர் ஏற்கவில்லை. இதை தொடர்ந்து அகமதாபாத் அறங்கூற்று மன்றத்தில் மோடி மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக் கோரி வர்மா வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த அறங்கூற்றுவர் எம்.எம்.ஷேக் அளித்த தீர்ப்பு விவரம்: நரேந்திர மோடி திருமண விவரத்தை மறைத்ததன் மூலம் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 125 ஏ (3)ன்படி குற்றம் செய்திருக்கிறார். ஆனால், இத்தகைய குற்றங்கள் பற்றி ஒரு ஆண்டுக்குள் புகார் செய்ய வேண்டும் என்கிறது குற்றவியல் நடைமுறை சட்டம். தற்போது ஒரு ஆண்டு 4 மாதங்கள் கழித்து தான் கூறப்பட்டுள்ளது. இதனால் காலத்தை கடந்த குற்றங்கள் தொடர்பான இப்புகாரை அறங்கூற்றுமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது. இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு அறங்கூற்றுவர் தீர்ப்பளித்தார் இவைவெல்லாம் ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய கதை. 
தற்போதைய கதை: மோடி இன்று தனது வேட்புமனுவை பதிகை செய்தார். அவர் தெரிவித்த சொத்து மதிப்பு தகவல்கள் மீது கடுமையான விமர்சனம் எழுப்பப் பட்டு வருகிறது. 
'கடந்த பல தேர்தல்களில் அவர் சொல்லாமல் மறைத்த மனைவியை எதிர்கட்சியினர் கண்டு பிடித்துக் கொடுத்தது போல, இந்த முறை  மோடி மறைக்கிற சொத்துக்கள் அனைத்தையும் மிக விரைவில் எதிர்க்கட்சியினர் கண்டு பிடித்துக் கொடுப்பார்கள்' என்று இணைய ஆர்வலர்கள் பதிவிட்டு கலக்கி வருகிறார்கள். 
1. மோடியின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.2.51 கோடியாம்.
2. மோடியின் கையிருப்பில் ரூ. 38,750 பணமும், வங்கி கணக்கில் ரூ. 4.143 பணமும் இருப்பதாக மோடி தெரிவித்துள்ளார். 
3. மோடி பெயரில் உள்ள வைப்பு நிதியில் ரூ. 1.27 கோடி பணம் உள்ளதாம். தவிர, ஆயுள் காப்பீட்டுக் கொள்கையில் அவரிடம் ரூ. 1.90 லட்சம் பணம் உள்ளதாம்.
4. மோடியின் பெயரில் சொந்தமாக நிலங்கள் அல்லது வணிகக் கட்டிடங்கள் கிடையாது. அவரிடமுள்ள ஒரே அசையா சொத்து குஜராத் காந்திநகர் பகுதியில் உள்ள அவருடைய சொந்த வீடு மட்டுமே. அதிலும் அவர் 25 விழுக்காடு வரை மட்டும் உரிமை கோர முடியுமாம். 
5. மோடியின் பெயரில் இருசக்கர அல்லது நான்கு சக்கர வாகனங்கள் எதுவும் புதியதாக பதிவு செய்யப்படவில்லையாம். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,134.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.