பாஜக- பட்டியல்வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் பிரிவின் தேசியச் செயலாளராக பதவி வகித்த எல்.முருகனுக்கு தற்போது தமிழக பாஜக தலைவராக பதவி வழங்கப்படுகிறது. 28,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பாஜக- பட்டியல்வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் பிரிவின் தேசியச் செயலாளராக பதவி வகித்த எல்.முருகனுக்கு தற்போது தமிழக பாஜக தலைவராக பதவி வழங்கப்படுகிறது. ஆகா பாஜகவிற்கு தமிழகத் தலைமை ஏற்க வருகின்;ற முருகன்- பாஜக தலைமைக்கு தமிழகத்து இயல்புகளை கற்றுத் தருவாரா? இல்லை வழக்கம்போல பாஜகவின் ஊது குழலாக செயல்பட்டு தமிழ் மக்களிடம் அசிங்கப் படுவாரா என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும். தமிழக பா.ஜ.க தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதனால், காலியான தமிழக பாஜக தலைவர் பதவியில் அடுத்து அமரப்போவது யார் என்ற கேள்வி எழுந்தது. புதிய தலைவருக்கான பரிசீலனையில் முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் கே.டி.ராகவன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், கரு.நாகராஜன் எனக் கட்சியின் பல முதன்மையர் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக அவ்வப்போது தகவல் வெளியாகியது. இந்த 6 மாதத்தில் ஒவ்வொரு முறையும் மாநிலத் தலைவர் பதவி குறித்த அறிவிப்பு டெல்லி பா.ஜ.க தலைமையிடம் இருந்து வரும்போதும் தமிழகத்தின் தலைவர் குறித்த அறிவிப்பு மட்டும் தவறிக் கொண்டே இருந்தது. தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராகப் பதவி வகித்து வரும் முருகன், சென்னை உயர் அறங்கூற்றுமன்ற வழக்கறிஞராகவும் இருக்கிறார். வழக்கறிஞராக 15 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராக பொறுப்பேற்ற முருகனின் மூன்றாண்டுகள் பதவிக்காலம் இன்னும் இரண்டு மாதங்களில் முடிகிறது. இந்தநிலையில், அவர் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். விரைவில், அந்தப் பதவியை விட்டு விலகி பாஜக தலைவராக பொறுப்பேற்றுக்கொள்ள இருக்கிறார். முரசொலி நில விவகாரத்தில் தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில்- திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் அணியமாக வேண்டும் என இவர் கூறியது அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. இதை எதிர்த்து திமுக உயர் அறங்கூற்றுமன்றம் சென்றது. ஸ்டாலின் நேரில் அணியமாக வேண்டியதில்லை எனவும், இந்த முன்னெடுப்பில் இருந்து தாழ்த்தப்பட்டோர் ஆணையத் துணைத் தலைவர் எல்.முருகன் விலகியிருக்க வேண்டும் எனவும் உயர் அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டது ஈண்டு நினைவு கூறத்தக்கது.
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது
என்று அறிவை முதன்மைப் படுத்துகிற தமிழ்ச்சமுதாயத்தின் குறிஞ்சி நிலத் தெய்வம் சேயோனுக்கும் பார்ப்பனியர்கள் கதை எழுதியிருக்கிறார்கள். அதில் சிவனுக்கு ‘ஓம்’ என்ற தான்தோன்றி இயக்க மந்திரத்தின் பொருள் கற்றுக் கொடுத்திருக்கிறார் முருகன் என்பதாக தமிழ் மரபுக்குப் பொருத்துமாறு கதை எழுதியிருக்கின்றார்கள்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



