Show all

அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதம்! கொரோனா இல்லாத மாநிலமாக மாறியது தமிழ்நாடு

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. இதில் 34 பேர் இந்தியர்கள், 16 பேர் இத்தாலியைச் சேர்ந்தவர்கள். தமிழர்கள் 0

28,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கடந்த மாதம் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் ஒமன் சென்றுவிட்டு சென்னை திரும்பியுள்ளார். அப்போது காய்ச்சல் மற்றும் இருமல் தொடர்பான புகார்களுடன் இராஜிவ் காந்தி பொது மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக தமிழக நலங்குத்துறை அதிகாரிகள் வாயிலாக தகவல்கள் வெளியாகின.

தற்போது அவரும் தீவிர சிகச்சையால் கெரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார். இது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கீச்சுவில் கூறியுள்ளதாவது: ‘இராஜிவ் காந்தி பொது மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு அனுமதிக்கப்பட்டவருக்கு கொரோனா நுண்ணுயிரித் தொற்று சோதனை அறிக்கையில் கொரோனா இல்லையென வந்து விட்டது. இது தமிழ்நாட்டிற்கு நல்ல செய்தி. தமிழ்நாடு நலங்குத்துறையின் துல்லியமான சிகிச்சை மற்றும் நிபுணத்துவத்தால் மட்டுமே இந்த விரைவான மீட்பு சாத்தியமானது, தற்போதைய நிலவரப்படி, தமிழ்நாடு கொரோனா இல்லாத மாநிலமாக மாறியுள்ளது’ என்று தெரிவித்து தமிழகத்திற்கு மகிழ்ச்சியை வழங்கி பெருமிதம் கொண்டாடுகிறார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.