வெள்ளிக் கிழமை திமுக போராட்டம் அறிவித்துள்ளது. இந்தியாவை ஆளும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றிருக்கிற, பாஜக அரசின் ஹிந்தி திணிப்பைக் கண்டித்து. 30,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஹிந்தி ஆதிக்கத்தை எதிர்த்து மாவட்டத் தலைநகரங்களில் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக திமுக அறிவித்துள்ளது. இன்று நடைபெற்ற உயர்மட்டக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு இந்த அறிவிப்பை திமுக வெளியிட்டுள்ளது. திமுகவின் உயர்மட்டக் குழுக் கூட்டம் இன்று சென்னையில் அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்த உயர்மட்டக் குழுக் கூட்டத்தில், இந்தியாவின் ஒரே அடையாளமாக ஹிந்தி இருக்க வேண்டும் என இந்தியாவை ஆளும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றிருக்கிற, பாஜக அரசின் உள்துறை அமைச்சர் அமித்சா பேசியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. நாட்டின் பொருளாதார சரிவு, காஷ்மீர் பிரச்சனை ஆகியவற்றிலிருந்து கவனத்தைத் திருப்பவதற்காக அமித்சா இவ்வாறு கூறியிருப்பதாகவும் இது நாட்டின் பன்முகத்தன்மைக்கு, வேற்றுமையில் ஒற்றுமை என்ற அரசியல்சட்டத்தின் அடிப்படை நோக்கங்களுக்கும் மாறானது எனவும் திமுக கூறியுள்ளது. இந்திய அரசில் பாஜக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்து பல்வேறு வழிகளில் ஹிந்தியைத் திணிக்க முயற்சித்துவருவதாகவும் தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டோரை இரண்டாம் தரக் குடிமக்களாக்க முயற்சி செய்வதை வேடிக்கை பார்க்க முடியாது என்றும் ஹிந்தித் திணிப்பை கைவிட்டுவிட்டு நாட்டை முன்னேற்றும் உருப்படியான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமென்றும் உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலினிடம் தோழமைக் கட்சிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்குமா எனக் கேட்டபோது, முதற்கட்டமாக, இந்தப் போராட்டங்களை திமுக சார்பில் அறிவித்திருக்கிறோம். அடுத்து என்ன நடக்கவிருக்கிறது, இந்தியாவை ஆளும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றிருக்கிற, பாஜக அரசிடமிருந்து என்ன பதில் வருகின்றது என்பதைப் பொறுத்து, அடுத்தகட்டமாக நடத்தவிருக்கும் போராட்டத்திற்கு, ஒத்த கருத்துடைய கட்சிகளோடு கலந்துபேசி அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து முடிவெடுப்போம் எனக் கூறினார். இந்த நிலையில் தமிழகத்தின் அரசியல் வடிவேலுவாகிய பொன். ராதாகிருஷ்ணன், ‘இந்தியாவிலேயே பழமையான மொழி தமிழ் என மோடி கூறியிருக்கிறார். இதற்கு அவரைப் பாராட்ட வேண்டாமா? இதை எல்லோரிடமும் எடுத்துச் சொல்ல வேண்டாமா? தமிழர்கள் நன்றி மறந்தவர்கள் என்று- எவ்வளவு அடிச்சாலும் தாங்கராண்டா இவன் ரொம்ப நல்லவேன்னு சொன்னாங்க என்ற வடிவேலின் நகைச்சுவை போல், அமித்சாவின் ஹிந்தித்திணிப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். தன்னுடைய கொத்தடிமைத் தனத்தை பறைசாற்றியுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல், வேண்டாததைத் திணித்தால் குமட்டும் என்று தெரிவித்துள்ளார். ஹிந்திப் பிரச்சனையை கிளப்பியதன் மூலம் பாஜக தேன்கூட்டில் கைவைத்துவிட்டதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியிருக்கிறார். பாஜகவினரின் ஹிந்தி திணிப்பு முயற்சிக்கு- ஏராளமான எதிர்ப்பு இடுகைகளும், கருத்துப் படங்களும் இணையத்தைத் தீயாக்கிவருகின்றன. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,277.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



