பிற மொழி கற்க வேண்டுமெனில் ஹிந்தியைக் கற்றால் நன்றாக இருக்கும் என கூறினேன் - சர்ச்சைக்கு அமித்சா விளக்கம். இதனால் நாளை மறுநாள் திமுக நடத்தவிருந்த போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளது. இந்திய அமைச்சர் சதானந்த கவுடாவும், ஹிந்தி மொழி, நாட்டின் பிற மாநில மொழிகளுக்கு தலைமை தாங்க முடியாது என்று முழங்கினார்; மிகச்சிறப்பு! ஹிந்தித் திணிப்பு விவகாரத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களின் கடுமையான எதிர்ப்பால் தாம் தெரிவித்த கருத்தில் இருந்து முதல் முறையாக பின்வாங்கி இருக்கிறார் இந்திய உள்துறை அமைச்சர் அமித்சா. இந்திய அரசில் மோடி மீண்டும் தலைமை அமைச்சராகப் பதவியேற்றதில் இருந்து ஹிந்தி திணிப்பு விவகாரம் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் ஒரே தேசம் ஒரே மொழி, ஹிந்தியே இந்தியாவின் பொதுமொழி என உள்துறை அமைச்சர் அமித்சா பேசினார். இது தமிழ்நாடு உள்ளிட்ட ஹிந்தி பேசாத மாநிலங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அமித்சாவின் ஹிந்தி திணிப்பு பேச்சுக்கு எதிராக பல்வேறு கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். என்னது ஹிந்தி பற்றி நான் அப்படி பேசினேனா? என்று பல்டி அடித்தார் அமித்சா! பஞ்சாயத்து முடிந்தது. தமிழகத்தில் போராட்டங்கள் மையம் கொண்டிருந்தன. இணையம் வெப்பத்தால் உருகிநின்றது. குடியாத்தத்தில் திமுக இளைஞர்கள் தொடர்வண்டி நிலையத்தில் ஹிந்தி எழுத்துகளை அழித்தனர். ஈரோடு உள்ளிட்ட இடங்களில் ஹிந்தி திணிப்புக்கு எதிராக போராட்டங்கள் இன்று நடத்தப்பட்டன. திமுக சார்பாக நாளை மறுநாள் இந்தி திணிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது. இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித்சா திடீரென தமது கருத்தில் இருந்து பின்வாங்கி இருக்கிறார். பாஜக அரசின் பல்வேறு திணிப்புகளுக்கு தொடர்ந்து தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால் தற்போதுதான் முதல் முறையாக தமது கருத்தில் இருந்து அமித்சா பின்வாங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது இந்தியாவில் வென்றெடுக்கப் பட்ட தாய்மொழியின் வெற்றி! இந்த தாய்மொழி உணர்வு தமிழகம் இந்தியாவிற்கு வழங்கிய கொடை. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,279.
01,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஹிந்தி திணிப்பில், தமிழகத்தின் கடும் எதிர்ப்பை, அனைத்து ஊடகங்களும் நேர்மையாக ஒளியைப் பாய்ச்சி மிளிர வைத்தன. கர்நாடகமும் தனது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தது. கேரளமும் சும்மா இருக்கவில்லை. அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் தாய்மொழிக்காக நின்றார்கள்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



