சக்கி வாசுதேவ், காவேரி கூக்குரல் நிகழ்ச்சியின் மூலம் 10 ஆயிரத்து 626 கோடி ரூபாயை வசூலிக்கத்திட்டமிட்டிருக்கிறார். ஒரு தனியார் நிறுவனத்துக்கு இதற்கான அனுமதியை எப்படி வழங்கலாம்? என்று கர்நாடக உச்ச அறங்கூற்றுமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்நிலையில் இந்த காவேரி கூக்குரல் என்பது மாபெரும் மோசடி என்றும் ஒரு மரக்கன்றை நடுவதற்கு பொது மக்களிடமிருந்து ரூ 42 ஐ நிதியாக எதிர்பார்ப்பதன் மூலம் சக்கி ரூ 10 ஆயிரத்து 626 கோடியை வசூலிக்கத் திட்டமிட்டிருக்கிறார் என்றும் திம்மக்கா போன்ற ஏழை ஆர்வலர்களே தங்கள் சொந்தப் பணத்தில் மரக்கன்றுகளை நடும்போது சக்கி அவ்வளவு பெரிய நிதியைத் திரட்ட அனுமதிக்கப்பட்டது எப்படி என்று பெங்களூருவைச் சேர்ந்த ஏ.வி.அமரநாதன் என்ற வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்திருந்தார். தலைமை அறங்கூற்றுவர் அபய் சீனிவாஸ், மற்றும அறங்கூற்றுவர் முகம்மது நிவாஸ் ஆகியோர் முன்னிலையில் நேற்று அம்மனு விசாரணைக்கு வந்த நிலையில் சக்கியின் மரக்கன்று வசூல் மீது உடனடியாக விசாரணை நடத்தும்படி மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,280.
02,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் சுமார் 256 கோடி மரக்கன்றுகளை நடும் ஒரு புதுவிதமான யுக்தியுடன் சக்கி வாசுதேவ் ‘காவேரி கூக்;குரல்’ என்ற பெயரில் ஒரு இயக்கத்தை முன்னெடுக்கிறார். இதற்கான கருத்துப் பரப்புதலுக்கு பெருமளவில் நடிகர், நடிகைகளைத் திரட்டி காட்சி கொடுத்த அவர், அடுத்து தமிழக முதல்வர் உட்பட சகல கட்சி அரசியல்வாதிகளையும் அரவணைத்துக்கொண்டார். அவரை முதல்வர் எடப்பாடி உள்ளிட்டவர்களே நம்காலத்தில் வாழும் மாமுனி என்று உச்சி முகர்ந்தனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



