Show all

தடுப்பூசி பரிசோதனையில் நீங்களும் இணையலாம்! இந்தியாவில் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி நாளை முதல் தன்னார்வலர்கள் மீது பரிசோதனை

மனிதர்களுக்கு கோவேக்சினை சோதனை முயற்சியாக செலுத்த தன்னார்வலர்கள் பங்கு பெறலாம். 18 முதல் 55 அகவை நிரம்பிய தன்னார்வலர்கள் தடுப்பூசி பரிசோதனையில் ஈடுபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

03,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: உலகை உலுக்கிக் கொண்டிருக்கிற கொரோனாவின் தாக்கம் வளர்முகமாகவே இருந்து கொண்டிருக்கிறது, தடுப்பூசிகள் மட்டுமே இதற்கான நிரந்தரத் தீர்வாக அமைய முடியும் என்கிற நிலையில், உலகின் பல மருத்துவமனை ஆய்வுக்கூடங்களில் தடுப்பூசி மருந்துகள் உருவாக்கும் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், கொரோனா நுண்நச்சு மனிதர்களைத் தொற்றாமல் பாதுகாப்பு அளிக்க, கோவாக்ஸின் என்ற பெயரிலான தடுப்பூசி மருந்தை உருவாக்கியுள்ளது.

கொரோனாவுக்கு எதிராக, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் தடுப்பு மருந்து என்று இதற்கு பெயர் கிடைத்துள்ளது. நாளை முதல் முதல் கட்டமாக இந்தக் கோவேக்சினை சோதனை முயற்சியாக மனிதர்களுக்கு செலுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

மனிதர்களுக்கு கோவேக்சினை சோதனை முயற்சியாக செலுத்த தன்னார்வலர்கள் பங்கு பெறலாம். 18 முதல் 55 அகவை நிரம்பிய தன்னார்வலர்கள்  தடுப்பூசி பரிசோதனையில் ஈடுபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பரிசோதனை மேற்கொள்ள உள்ள நபர்களுக்கு எந்த வித நோயும் இல்லாமல் முழு உடல் நலத்துடன் இருக்க வேண்டும். இதற்கான பதிவு நடைமுறை திங்கட்கிழமை முதல் நடைபெறும் என எய்ம்ஸ் மருத்துவமனையின் ஆராய்ச்சியாளர் மருத்துவர் சஞ்ஜெய் ராய் தெரித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், சோதனையில் பங்கேற்க விரும்பும் எந்தவொரு நலமான நபரும் Ctaiims.covid19@gmail.com என்ற மின்னஞ்சலில் தங்கள் விவரம் குறித்து அனுப்பலாம் அல்லது சேதி மூலமாகவும் அனுப்பலாம் அல்லது 7428847499 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.