Show all

தமிழகம் சாதனை! இன்றைக்கு 52993 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 52993 பேர்களுக்குக் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 

03,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 52993 பேர்களுக்குக் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 

மொத்தமாக 2 லட்சம் பாதிப்பை நோக்கி தமிழகம் சென்று கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் இன்று மட்டும் 4979 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,65,714 லிருந்து 1,70,693 ஆக அதிகரித்துள்ளது. 

இந்த நிலையில் அதிரடி திருப்பமாக தமிழகத்தில் இன்று மட்டும் ஒரே நாளில் 52993 மாதிரிகள் தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. 1932492 மாதிரிகள் இதுவரை தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளன. 

கொரோனா சோதனைகளை தமிழகம் துரிதப்படுத்தி உள்ளது. தமிழகத்தில் மொத்தமாக சோதனை மையங்களின் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் தமிழகத்தில்தான் அதிகமாக சோதனை மையங்கள் உள்ளன. அதேபோல் இந்தியாவிலேயே அதிகமாக தமிழகத்தில்தான் கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் எங்கும் ஒரே நாளில் இத்தனை கொரோனா சோதனைகள் செய்யப்படவில்லை. கடந்த மூன்று நாட்களில் தமிழகத்தில் 1.40 லட்சம் கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இந்திய அளவில் இதுதான் மிக அதிகம். 

அதிகமான கொரோனா சோதனைகள் செய்வதன் மூலம் நோய் பரவலை எளிதாக கண்டுபிடிக்க முடியும். இதன் மூலம் மேலும் கொரோனா பரவலை தடுக்க முடியும். 

தமிழகத்தில் இப்படி அதிக கொரோனா சோதனைகளை செய்ய- வீடு வீடாக செய்யப்பட்ட கொரோனா சோதனைகள், அதிக அளவில் வாங்கப்பட்டுள்ள சோதனை கருவிகள், கடைசியாக தமிழகத்தில் மொத்தமாக சோதனை மையங்களின் எண்ணிக்கை 112 ஆக உயர்த்தப்பட்டது. ஆகியவைகள் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.

இது குறித்து நலங்குத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் விளக்கமளித்ததாவது:
கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அதற்கான மருத்துவ வசதிகளும் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் மருத்துவப் பணியாளர்கள் தற்போது புதிதாக நியமிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா நுண்நச்;சைக் கட்டுப்படுத்த நடுவண் அரசிடம் தமிழக அரசு 3 ஆயிரம் கோடி ரூபாய் நிதி கேட்டுள்ளது. இருப்பினும் அதற்காக எதிர்பார்த்துக் கொண்டிராமல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை மக்களுக்காக ஒதுக்கி பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். ஒரு லட்சம் பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர் என்று கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.