இந்தியாவில் குறிப்பாக நாகாலாந்தில்தான் நாய் கறி அதிகமாக விற்பனையாகிறது. நாகாலந்தில் ஆண்டுக்கு 30000 வரை நாய்கள் கொல்லப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நாகாலந்தில் நாய் கறி விற்பனைக்கு தடை விதித்து இருக்கிறது மாநில அரசு 03,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: மனிதன் இறைச்சி உணவுக்குப் பயன்படுத்தும் விலங்குகளில் ஆடு, கோழி, மீன் என்பன பெருவாரியான பயன்பாட்டில் உள்ளவைகள். அடுத்த நிலையில் மாடும், பன்றியும் இடம் பெறுகின்றன. பென்சில்வேனியாவில் நாய்கறிக்கும், பூனை கறிக்கும் அரசு அனுமதித்திருக்கிறது. சீனா, கனா, நைஜிரியா, போலந்து, அண்டார்டிகா, வியட்நாம், சுவிட்சர்லாந்து, இந்தோனேசியா, தென்கொரியா, ஆகிய நாடுகளிலும் நாய் கறி உண்ணும் வழக்கம் பாரம்பரியமாகவே உள்ளது. இந்தோனேசியாவில் நாய்கறிக்கு தடை இருக்கிறது ஆனாலும் விடுமுறை நாட்களிலும், விழா நாட்களிலும் நாய்கறி சிறப்பு உணவாக இருக்கிறது. இந்தியாவில், நாய்கறிக்கு தடை உள்ளது. ஆனால் இந்தியாவின் வட கிழக்குப் பகுதிகளான மசோராம் மணிப்பூர் நாகலந்து ஆகிய பகுதிகளில் நாய் கறி உணவு புழக்கத்தில் உள்ளது. இந்தியாவில் குறிப்பாக நாகாலாந்தில்தான் நாய் கறி அதிகமாக விற்பனையாகிறது. நாகாலந்தில் ஆண்டுக்கு 30000 வரை நாய்கள் கொல்லப்படுவதாக சொல்லப்படுகிறது. நாகாலாந்தின் கோஹிமாவில் அசைவ உணவகங்களில் நாய்கறியைத்தான் சிறப்பு உணவாக அன்றாடம் எழுதி போட்டிருப்பார்கள். வடகிழக்கு மாநிலங்களில்தான் நாய் கடத்தல் குற்றங்களும் அதிகம். அதிலும் பிற மாநிலங்களில் இருந்து நாகாலாந்துக்கு தெரு நாய்களை கடத்திச் செல்லும் குற்றங்கள் மிக அதிகம். ஏனெனில் நாகாலாந்தில் நாய்களே இல்லை என்கிற நிலைமைதான். அப்படி ஒரு ஈடுபாடு நாய் கறி மீது. இந்த நாய்கறி விற்பனைக்கு எப்படியாவது தடை போட்டுவிட வேண்டும் என்பது விலங்கு நல ஆர்வலர்களின் நீண்டகால நோக்கம். இதனை அண்மையில் நாகாலாந்து மாநில அரசு நிறைவேற்றிவிட்டது. நாகாலாந்தில் நாய் விற்பனை சந்தை, இறைச்சிக்கு தடை விதிப்பதாக அம்மாநில அரசு அறிவித்தது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. நாகாலாந்தில் நாய் கறி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதற்கு சமூக செயற்பாட்டாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். நாங்கள் என்ன உணவு சாப்பிட வேண்டும் என்பதை எப்படி அரசு தீர்மானிக்கலாம்? எங்கள் கலாசாரத்தின் வெளிப்பாடாக இருக்கும் நாய்கறி உண்பதை எப்படி தடை செய்யலாம்? எங்கள் தேசிய இனப் பண்பாட்டின் மீதான தாக்குதல் என்றெல்லாம் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது நாகா இனமக்களின் தாய்நிலம்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



