Show all

மோடியின் விடுதலைநாள் உரை ஏமாற்றம் அளிக்கிறது: காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுஜேர்வலா

30,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியாவின் 72-வது ஆண்டு விடுதலை நாள் இன்று நாடு முழுவதும் ஆட்சியாளர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. காலை 7.30 மணியளவில் டெல்லி செங்கோட்டையில் மோடி, மூவர்ணக்கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்.

இந்த நிலையில், மோடியின் விடுதலைநாள் உரை ஏமாற்றம் அளிப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.  வழக்கமான அரசு நடவடிக்கைகளை அரசு சாதனைகளாக தலைமை அமைச்சர் பட்டியலிட்டுள்ளார் எனவும் காங்கிரஸ் விமர்சித்துள்ளது. 

இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுஜேர்வலா கூறியதாவது: மோடியின் விடுதலைநாள் உரையில் ஒன்றுமே இல்லை. மோடியின் உரையில் குறிப்பிட்ட உட்பொருள் எதுவும் இல்லை. ரபேல், வியாபம் முறைகேடு பற்றி மோடி எதுவுமே பேசவில்லை. டோக்லாம் பகுதியில் சீனாவின் ஆக்கிரமிப்பு, தேசத்தில் ஏற்பட்டுள்ள வெறுப்புணர்வு ஆகியவை பற்றியும் மோடி எதுவும் குறிப்பிடவில்லை என்றார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,880.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.