30,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திங்கட் கிழமையன்று நாடாளுமன்றத்தில் இம்ரான்கான் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார். அப்போது பாராளுமன்ற உறுப்பினர் பதவியேற்பு ஆவணத்தில் கையெழுத்திட்டு நாடாளுமன்றத்துக்கான அடையாள அட்டை பெறுவதற்காக புகைப்படம் எடுப்பது வழக்கம். அவ்வாறு புகைப்படம் எடுக்கும்போதும் இம்ரான் கோட் அணியவில்லை, வெள்ளை நிற ஜிப்பா மட்டும் அணிந்திருந்தார். பின்னர் அங்கிருந்த நாடாளுமன்ற ஊழியரது கோட்டை அணிந்து கொண்டு அடையாள புகைப்படத்துக்கு இம்ரான் கான் படம் எடுத்துக் கொண்டார். கடந்த மாதம் பாகிஸ்தான் 272 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. எனினும், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான பிடிஐ தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து சிறிய கட்சிகளின் ஆதரவுடன் இம்ரான் கான் ஆட்சி அமைக்க உள்ளார். வரும் சனிக்கிழமை புதிய தலைமை அமைச்சராகப் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அவர் கடன் வாங்கி கோட் அணிந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட காணொளி இணையத்தில் பரவி அவரின் எதார்த்தம் பாகிஸ்தான் மக்களாலும் இணைய ஆர்வலர்களாலும் பாராட்டு பெற்று வருகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,880.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



