இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஆனாலும் அந்தப் பட்டியலில் சென்னை இடம் பெறாதது சென்னை வாழ்மக்களுக்கு ஏமாற்றமே. 03,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இந்தக் கிழமை முழுவதும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது. ஆனால் கிழமையின் தொடக்கத்தில் மழை பெய்யாமல் ஏமாற்றியது. இந்த நிலையில் நேற்று முதல்நாள் லேசான மழை பெய்தது. நேற்றும் பல இடங்களில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இன்றும் தமிழகத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்து உள்ளது. மழைக்கு வாய்ப்பான பகுதிகளாக ஈரோடு, தருமபுரி, வேலூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தூத்துக்குடி, கோவை மற்றும் பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் இன்று மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பலத்த இடி மின்னல் அடிக்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்து உள்ளது. நேற்றே தமிழகத்தில் பல இடங்களில் பலத்த சூறைக்காற்று வீசியது குறிப்பிடத்தக்கது. ஆனால் சென்னையில் மழைக்கு வாய்ப்பில்லை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,155.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



