Show all

மோடிக்குப் பிறப்புச் சான்றிதழ் இல்லையா! இன்றைய பேசுபொருளும் தலைப்பும் ஆகியிருப்பது

‘தலைமைஅமைச்சர் மோடி பிறப்பால் ஒரு இந்தியர். குடியுரிமை சான்றிதழை காட்ட தேவையில்லை’ என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு தலைமைஅமைச்சர் அலுவலகம் பதில் அளித்திருக்கிறது.

18,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி பிறப்பால் ஒரு இந்தியர். எனவே அவர் குடியுரிமைச் சான்றிதழ் எதையும் காட்டத் தேவையில்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தலைமைஅமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

குடியுரிமை திருத்த சட்டம் என்பது யாருக்குப் பொருந்தும், யாருக்குப் பொருந்தாது என்பது குறித்து மிகப்பெரிய குழப்பம் உருவாகி உள்ளது. அதாவது பிறப்புச் சான்றிதழை அடிப்படையாக வைத்து அரசு 'தேசிய குடிமக்கள் நடைமுறை'யைக் கொண்டுவரப்போவதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. 

அஸ்ஸாமில் கொண்டுவரப்பட்ட தேசிய குடிமக்கள் நடைமுறையில் பிறப்புச் சான்றிதழே முதன்மை ஆவணமாக பார்க்கப்பட்டது. அத்துடன் தற்போது ஒருவர் இந்தியாவில் பிறந்திருந்தாலும் அவரது தந்தை அல்லது அவரது முன்னோர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதற்கான ஆதாரத்தை காட்ட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

அஸ்சமைப் போல நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் நடைமுறை என்ற ஒன்று கொண்டுவரப்படும் என்றும், அதற்காகவே குடியுரிமை திருத்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அது குறிப்பிட்ட சமூக மக்களுக்கு எதிராக தவறாக பயன்படுத்தப்படும் என்கிற அச்சமும் நிலவி வருகிறது. ஆனால் இதனை நடுவண் பாஜக அரசு பேச்சளவில் மறுத்துவருகிறது. அஸ்ஸாம் வேறு மற்ற இந்தியாவின் பிற பகுதிகள் என்பது வேறு என்று கூறி வருகிறது. 

இந்தியா முழுவதும் தேசிய குடிமக்கள் நடைமுறை கொண்டுவரும் திட்டம் அரசுக்கு இல்லை என்று மோடி கடந்த ஆண்டு இறுதியில் தெரிவித்தார். அத்துடன் குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்தியர்கள் யாருக்கும் பாதிப்பு வராது என்றும் குடியுரிமை திருத்த சட்டம் என்பது அண்டை நாடுகளில் இருந்து அகதியாக வந்தவர்களுக்கு குடியுரிமை அளிக்கும் சட்டம் என்றும், யாருடையை குடியுரிமையையும் பறிக்கும் சட்டம் இல்லை என்றும் பேச்சளவில் பாஜகவினர் சிலரால் சொல்லப்பட்டு வருகிறது. 

அஸ்ஸாம் பாணியில் தேசிய குடிமக்கள் நடைமுறை நடக்குமோ என்ற அச்சம் காரணமாக, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக டெல்லியில் நடந்த போராட்டத்தில் பெரும் வன்முறை கிளப்பிவிடப்பட்டு 42 பேர் வரை கொல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த கலவரக் கிளப்பலால்,  குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்தியர்கள் யாருக்கும் பாதிப்பு வராது என்றும் குடியுரிமை திருத்த சட்டம் என்பது அண்டை நாடுகளில் இருந்து அகதியாக வந்தவர்களுக்கு குடியுரிமை அளிக்கும் சட்டம் என்றும், யாருடையை குடியுரிமையையும் பறிக்கும் சட்டம் இல்லை என்றும் பேச்சளவில் பாஜகவினர் சிலரால் சொல்லப்பட்டு வந்த தகவல் மீது இருந்த கொஞ்சம் நஞ்சம் நம்பிக்ககையும் இப்போது கேள்விக்குறியாகி விட்டது. 

இந்த நிலையில்தான், சிறிசுபாங்கர் சர்கர் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தலைமைஅமைச்சர் மோடியின் குடியுரிமைச் சான்றிதழை காண்பிக்குமாறு கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த தலைமைஅமைச்சர் அலுவலகம் இந்தியக் குடியுரிமை சட்டம் 1955 இன் பிரிவு 3ன் படி பிறப்பால் தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி இந்திய குடிமகன் என்றும், அவர் பிறப்பால் இந்தியர் என்ற தகுதியைப்  பெறுவதால் அவருக்கு குடியுரிமை சான்றிழ் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது.

விதவிதமான வெட்டிக் காரணங்கள் சொல்லப்பட சொல்லப்பட மக்களின் அச்சம் கூடிக் கொண்டேதாம் போகிறது. இந்தக் குடியரிமைச் சட்டத்தால் நாட்டின் ஒரு காசு கடனும்கூட  குறையப் போவதில்லையே? இந்தியக் குடிமகனின்; மீது தலைக்கு ரூ109503 கடன் வாங்கி வைத்துக் கொண்டு, இந்திய மக்களின் போராட்டத்தை மதிக்காமல் கலவரத்தைத் தூண்டி மேலும் மேலும் நாட்டின் சொத்துக்கு பங்கம் விளைவித்துக் கொண்டிருந்தால் எப்படி? அந்தக் கடனும் மக்கள் மீதுதாமே ஏற்றப்படும் என்று மக்கள் கோபப்படுகின்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.